அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Monday, December 13, 2010

இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - ETISALATH



க்கிய
அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாய்ஸ் ஆஃப் இண்டெர்நெட் ப்ரோட்டோகால்(வாய்ப்) என்ற இணையதளம் வழியான தொலைத்தொடர்பு வசதி அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து செயல்படத் துவங்கும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு சேவையாளரான எடிசலாத் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுத் தொடர்பான நடவடிக்கைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாக எடிசலாத்தின் சீனியர் துணைத்தலைவர் அப்துல்லாஹ் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட வாய்ப் கால் கட்டமைப்பை துவக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேவையாளர்களான எடிசலாத்தும் டூவும் கடந்த ஜூலை மாதம் வாய்ப் கால் வசதியை துவக்கப்போவதாக அறிவித்திருந்தன. ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் இத்திட்டம் காலதாமதமானது. அதிகாரப்பூர்வ இண்டெர்நெட் கால் வசதி நடைமுறைக்கு வருவதன்மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சொந்த நாட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிகநேரம் பேசும் வாய்ப்பு ஏற்படும்.

தற்பொழுது அனுமதி பெறாத இண்டெர்நெட் வாய்ப் கால் சேவையாளர்களின் மூலம் பலர் தொடர்புக்கொண்டு வந்தாலும், ஒருவித அச்சத்துடனே அதனை பயன்படுத்துகின்றனர். இனி, அதிகாரப்பூர்வ இண்டெர்நெட் கால் வசதி கிடைப்பதால் பயமின்றி உரையாடலாம்.

இந்தியாவிற்கான மொபைல், தொலைபேசி கட்டணங்களை எடிசலாத்தும், டூவும் குறைத்த பொழுதிலும் சாதாரண மக்களுக்கு பொருளாதார சிக்கலையே ஏற்படுத்தி வந்தது.

பிரபல வாய்ப் கால் சேவை நிறுவனமான ஸ்கைப் யு.ஏ.இ மார்க்கெட்டில் நுழைய முயற்சிச்செய்து வருகிறது. ஆனால் எடிசலாத்திற்கும், டூவிற்கும் மட்டுமே அனுமதியுள்ளது என யு.ஏ.இ தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

செய்தி & நன்றி :மாத்யமம் & பாலைவனத் தூது

அல்லாபிச்ச அண்ணாச்சி-மிஸ்ரா கமிஷன் என்னாச்சு?

 
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)
 என்.சி.ஏ.இ..ஆர் என்ற தேசிய பயன்பாட்டு பொருளிய ஆய்வுக்குழு, புதுடெல்லி 2009 ஆம் ஆண்டு சமர்ப்பித்த ஆய்வில் தலித்துகள் 32 சதவீதம் வறுமைக் கோட்டுக்குக் கீழும், முஸ்லிம்கள் 31 சதவீதம் வறுமைக்கோட்டுக்கு கீழும் துவழ்கின்றர் என்று கூறுகின்றது.
சமீபத்தில் தமிழகத்தில் எடுத்த மக்கள் தொகை கணக்குப் படி முஸ்லிம்கள் 34,70,647 பேர்கள் உள்ளனர்.

          2008ஆம் ஆண்டு மைனாரிட்டி நலன் ஆய்வு செய்த நீதிபதி ராஜேந்தர் சச்சார் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் இந்திய நாட்டில் தலித்துகளை விட பொருளாதாரம், வேலை வாய்ப்பிலும், வாழ்கைத் தரத்திலும் தாழ்ந்திருக்கின்றனர் என்று கூறியிருப்பது ஒவ்வொரு பள்ளிவாசல் வாயிலிலும், தர்கா வாயிலிலும், வியாபார தளங்களிலும், செல்வந்தர் வீடுக்கம் யாசகம் கேட்டு வெள்ளிதோறும் படையெடுக்கும் ஏழை முஸ்லிம்களை வைத்து உண்மையென தெரிந்து கொள்ளலாம். ஏன் தலித்துகள் முன்னேறியிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் செய்ய பல சலுகைகள் இருப்பதால் தான் என்றால் மிகையாகாது. அந்த சச்சார் கமிஷனுக்குக் கூட இன்னும் பரிசீலனை எடுத்துக் கொள்ளவில்லை  என்று பாராளுமன்றத்தில் பிரமர்  அறிவிப்பு வெளியிட்டதாக சமீபத்தில் வந்த செய்திகள் சொல்லின.

          அதனைத் தொடர்ந்து உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டு என்னன்ன சலுகைகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. மிஸ்ரா அவர்கள் தனது பணிக் காலத்தில் மிகவும் நேர்மையானவர் என பெயர் பெற்றவர். அவர் 2009 ஆம் ஆண்டு கடைசியில் சமர்ப்பித்த அறிக்கையில் முஸ்லிம் முன்னேற 10 சதவீதம் வேலை வாய்ப்பு கல்வியில் கொடுக்க வேண்டும். மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் 50 சதவீதம் முஸ்லிம் நடத்தப்படும் நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதோர் நடத்தப்படும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த ஒதிக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதங்களுக்கு மனம் மாற்றம் அடைந்த தலித் இன மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விருப்பப்பட்டால் பழைய சாதிச்சான்றிதழிலேயே சலுகைகள் பெறலாம் எனக்கூறி தடாலடி அறிக்கையினை சமர்ப்பித்தார்.
        
முஸ்லிம்கள் ஓட்டுக்களை பெறத்துடிக்கும் சில அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் மிஸ்ரா கமிஷனை நிறைவேற்ற வேண்டும் என ஆரம்பத்தில் குரல் கொடுத்தன. பாரதிய ஜனதா மட்டும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா இஸ்லாமியர், கிறித்துவர் தூண்டுதலின் பேரில் அவர்களுக்கு சாதகமான அறிக்கையினை சமர்ப்பித்துள்ளார் என கூக்குரலிட்டன. முஸ்லிம் சமுதாய இயக்கங்கள் ஆரம்பத்தில் பல ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையினை நிறைவேற்ற குரல் எழுப்பின. ஆனால் அந்தக் குரல் ஊதுபத்தி பொருத்தியவுடன் எரிந்து சாம்பலாகிப் போவது போன்ற கதையாகி விட்டது. அவர்கள் குரல் வெவ்வேறு பிரச்னையிலும், சகோதர இயக்கங்களிடையே பகைமை வளர்ப்பதிலும், ஐகோர்ட்டில் வழக்குகள் தங்களுக்குள்ளே தொடர்ந்து கோர்ட்டு வரை நாற்றம் அடித்து விட்டது. பொதுக்கூட்டங்களிலும், தங்கள் இயக்க ஊடகங்களிலும் ஒருவருடைய கழுத்தினை மற்றொருவர் நெரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்ற அரசியல் கட்சிகளைச் சார்ந்து அரசியல் நடத்துவதால் அவர்களுக்கு துதிபாடும் ஊது கோளாக மட்டுமே இருக்கின்றாரகள் என்றால் பொய்யாகுமா?
நீதிபதி சச்சார் முஸ்லிம்களை தலித்துகளின் முன்னேற்றத்தினை ஒப்பிட்டதும், அதே போல நீதிபதி மிஸ்ரா முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்தும் ஏன் என்று ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். 2010 மே மாதம் வெளியிடப்பட்ட நாட்டின் முக்கியமான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வினை எழுதியவர்கள் மொத்தம் 4,09,110 பேர்கள். அதில் முதல் நிலையில் தேர்வு பெற்று முதன்மை தேர்விற்கு தகுதியுள்ளவர்கள் எண்ணிக்கை 12,025 ஆகும்.  அந்த முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் முஸ்லிம்கள் 21, அதாவது 2.5 சதவீதமாகும். அந்த 21 நபர்களில் 100 ரேங்க் பட்டியலுக்குள் இடம் பிடித்த நான்கு பேர்கள் முஸ்லிம்களாகும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் கூறியிருப்பது போல நமக்கு 10 சதவீத ஒதிக்கீடு கிடைத்திருந்தால் நாம் 84 ஐ.ஏ.எஸ், ஐ.பீ.எஸ்களை பெற்றிருப்போம். ஏன் நம்மிடம் தகுதியானவர்கள் இல்லையா என்றால் இருக்கிறார்கள் என்பதினை ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் போல ஒரு உதாரணத்தினை சொல்லலாம் என நினைக்கின்றேன். 2010 மே மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாமதாக வந்தவர் காஷ்மீரைச்சார்ந்த சேக் பசல் என்றால் ஆச்சரியமில்லையா? இது போன்ற நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் நம்மிடையே இருக்கத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் இல்லாததால் அவர்கள் கைக்குள் திணிக்கப்பட்ட வேலைகளில் இருந்து வாடுகின்றனர் என்பது தான் உண்மை.
அது சரி ஏன் பி.ஜே.பியும் அதனைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையினை ஆக்ரோசமாக எதிர்க்;;;;;;கின்றனர்? என்ற கேள்வியினைக் கேட்கலாம்.
1)      முஸ்லிம் அல்லாத நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் 15 சதவீத ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமே அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாகத் தானே அவர்கள் கருதுகின்றனர்..
2)      மனம் மாறிய தலித்துகள் அவர்கள் முன்பு அனுபவித்த சலுகையே மீண்டும் பெறலாம். இந்து தலித்துகள் மனம் மாறுவதினையே எதிர்ப்பவர்கள் அவர்கள் முஸ்லிம் மார்க்கத்திற்கு வந்த பிறகும் அவர்களுக்குள்ள சலுகைகளை எப்படி அனுமதிப்பார்கள். ஆகவே தான் பி.ஜே.பி கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள்.
ஆனால் முஸ்லிம் நிறுவனங்களை நடத்துகிறவர்கள் 50 சதவீம் முஸ்லிம் ஒதுக்கீடு வழங்குவார்களா என ஆயும் போது நிச்சயமாக கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இப்போது 80 சதவீத முஸ்லிம் கல்வி, மற்றும் தொழில் நிறுவனங்களில் மாணவர்களாக இருப்பவர்களோ அல்லது வேலை பார்ப்பவர்களோ 40 சதவீதத்தினைத் தாண்டினால் அபூவரம் என்றே கூறலாம். கல்வி நிறுவனங்களை நடத்துகிறவர்கள் யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும், தொழில் நிறுவனங்கள் யார் அதிகம் படித்திருப்பார்களோ அல்லது யார் சிபாரிசு செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் முன்னுரினை கொடுப்பார். மேற்கூறிய இரண்டுமில்லாத முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையில் பின் யார் தான் வேலை கொடுக்க முன் வருவர். ஆகவே தான் முஸ்லிம் செல்வந்தர்களின் பின்னணியில் அரசியல் நடத்துவர்களும், சமூக அமைப்பு நடத்துபவர்களும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையினை நிறைவேற்ற தொடர்ந்து குரல் எழுப்பாது மவுனம் சாதிக்கின்றனர் என்று ஒரு உதாரணத்தினை மட்டும் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன்.
        
இந்தியா-பாக்கிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் அரசியல் கட்சி இந்தியா தான் தங்கள் நாடு என அறிவித்தது. யார் தலைமையில் உள்ள கட்சி? பல லட்சங்களுக்கு சொந்தக்காரராக தோல் பிசனஸ் செய்து தன் கட்சிக்காக அத்தனை செல்வத்தினையும் அர்ப்பணித்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தலைமையிலான அன்றைய கட்சி. பெரிய தொழில் முனைவரான காயிதே மில்லத் அவர்கள் பல்லாவரத்திலிருந்து தான் தலைமையேற்ற அரசியல் கட்சி அலுவலகமான மரைக்காயர் லெப்பை தெருவிற்கு மின்சார ரயிலில் பயணம் செய்து பீச் ரயில் நிலையத்திலிறங்கி சைக்கிள் ரிக்ஸாவில் செல்வதினை நான் சென்னையில் புதுக்கல்லூரி மாணவனாக இருந்த போது 1966ஆம் ஆண்டு பார்த்திருக்கிறேன். அப்போது இளையாங்குடியினைச் சார்ந்த பி.என்.ஐ. அபுத்தாலிபு அவர்கள் பொருளாளராக இருந்தார். அவரையும் அந்த அலுவலகத்தில் பார்த்திருக்கின்றேன். அவரும் கடைசி வரை காசு சம்பாதிக்காமலே கட்சிக்காக வாழ்ந்தார்.  அவர்கள் எங்கே பணக்கார தொழில் முனைவர் காயிதே மில்லத் மின்சார ரயிலில் தன் கட்சிக்கு வந்தாரே அவர் எங்கே. மடுவிற்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்றால் மிகையாகுமா?
        
தமிழ் நாட்டில் சமூக அமைப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் தான் வெற்றி வாகை சூடியதாக வரலாறு. உதாரணத்திற்கு ஆரம்பத்தில் தமிழ் சமூக சேவையில் ஈடுபட்ட ஜஸ்ட்டிஸ் பார்ட்டியாக இருந்த இன்றைய திராவிட கட்சிகள் சிறந்து விளங்குகின்றன. வன்னியர் தனி ஒதுக்கீடுக்காக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி 20 சதவீத ஒதுக்கீடு மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் தங்கள் சமூகத்தினை பிரதான பட்டியலில் சேர்த்து விட்டனர். இன்னும் ஐகோர்ட் நீதிபதி பட்டியலில் தங்கள் சமூகம் ஒதுக்கப் படுகிறது என்று தொடர்ந்து குரல் எழுப்புகின்றனர். ஆனால் எந்த சமூக சேவையிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களை இணைத்துக் கொள்ளாததால் அவ்வளவாக அரசியலில் தனியிடமாக சோபிக்க முடியவில்லை.
சமீபத்தில் கூட தி.மு..க வேலை வாய்ப்பு முகாம்களை மாவட்டம் தோறும் நடத்தி எல்லா தொழில் முனைவர்களையும் வரவழைத்து பல பேர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியதாக செய்திகள் படத்துடன் வெளியிடப்பட்டன. அது போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் முஸ்லிம் தொழில் முனைவர்களை ஒருங்கிணைத்து வேலையில்லா படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு எங்காவது வேலை வாய்ப்பினை வழங்கியதுண்டா?
விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜீ கிராம கல்விக்கு இரண்டு மில்லியன் டாலர(ரூபாய் 8.80கோடி) தானமாக வலங்கியது போல அந்த பணக்காரர்கள் முஸ்லிம் சமூக. கல்வி தொண்டுகளுக்கு வழங்கியதுண்டா? அப்படி செய்திருந்தால் தமிழக  முஸ்லிம்கள் அவர்களை தங்கள் தோள்மேல் தூக்கி ஊர்வலமாக சென்று பாராட்டு விழா எடுத்திருப்பார்கள்.
       
  சென்னை செவன்வெல்ஸ் பகுதியில் உள்ள பி.வி. ஐயர் தெருவில் உள்ள பிரமாண்டமான பள்ளிவாசல் மாஸ்க்கான் சாவடி பள்ளி. அங்கே ஒவ்வொரு வெள்ளி தோறும் ஜூம்மா தொழுவதிற்கு இடைஞ்சலாக வாகனங்கள் சப்தம் எழுப்பி போய்க் கொண்டிருக்கும். ஆனால் 10.12.2010 அன்று ஒரு சமூக அமைப்பினர் அப்படி போகும் வாகனங்களை ஜூம்மா தொழும்போது தடுத்தி நிறுத்தி அமைதியாக தொழ வழிவகை செய்தது நான் நேரில் கண்டேன். அவர்களின் சமூக சேவை மக்கள் பாராட்டும் படியாக இருந்தது. அதே போன்று பல இடங்களில் சமூக அமைப்புகள் ரத்ததான முகாங்கள் நடத்துகின்றன, மருத்துவ அவசர சேவைகளுக்கு ஆம்புலன்ஸ வண்டிகள் வழங்குகின்றன, மவுத்தாகி விட்டால் இலவசமாக ஜனாசா பெட்டிகள் வழங்குகின்றன. ஆனால் எந்த முஸ்லிம் அரசியல் கட்சியாவது அதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட்டதுண்டா? ஆகவே முஸ்லிம் அரசியல் சட்சிகளும் சமூக அமைப்புகளும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்கு இணைந்து செயலாற்ற வேண்டும். நாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வையினையும,; அவனுடைய இறுதித் தூதர் ரஸுலுல்லாவினையும் நம்பி ஈமான் கொண்டவர்கள். ஆகவே முஸ்லிம் சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற பகைமையினை மறந்து ஒத்த குரல் எழுப்ப வேண்டும். ஒரு சில எம்.எல்.ஏ சீட்டுக்களுக்காக நம்முடைய சமூதாயத்தினை எந்த சந்தர்ப்பத்திலும் அடகு வைக்கக் கூடாது தனித்தன்மையுடன் விளங்க வேண்டும். அவ்வாறு செயல் பட்டதால் தான் இன்று தொல். திருமாவளவன் தன் ஒட்டு மொத்த தலித் சமூதாயத்தின் குரலினை பாராளுமன்றத்திலும், அரசு சலுகையினை பெறுவதிலும், தன் சமூகம் ஒடுக்கப்படும் போது குரல் எழுப்புவதிலும் முனைப்பு காட்டி  வெகு வேகமாக முன்னேறி வருகிறார்.
        
தேர்தல் வரும், போகும் ஆனால் முஸ்லிம் சமூகம் முன்னேற அறிக்கை சமர்ப்பித்த மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை காற்றில் பறக்க விடாது கட்டியாக பிடித்துக் கொண்டு நமது ஒருங்கிணைந்த குரலாக, வருங்கால தேர்தலின் ஒரே கோரிக்கையாக வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்தால் மக்கள் தொகையில் 6 சதவீதம் இருக்கும் தமிழக முஸ்லிம்களுக்கு அதிகப்படியாக 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீத கல்வி, வேலை வாய்ப்பு ஒதுக்கடாவது கிடைக்கும். மைனாரிட்டி சேர்மன் பதவியும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும். அது மூலம் தமிழக முஸ்லிம் மக்கள் நலனுக்கு அடித்தளமாக அமைவது உறுதியாகுமல்லவா?

நன்றிகள்  :(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)
                     &  http://lalpetexpress.com/

Tuesday, November 30, 2010

விக்கிலீக் வெளியிடும் ரகசியங்கள்:

 இந்தியா பற்றியும் பரபரப்பான தகவல்கள்


அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை தொடர்ந்து, அந்த நாட்டின் தூதரக ரகசியங்களையும் விக்கிலீக் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க தூதர்கள் மேற்கொண்ட உளவு வேலைகளை அது அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து 4 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் என்ற புலனாய்வு இணையதள நிறுவனம் வெளியிட்டது.

 அதனால், அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அதிர்ச்சி அடைந்தது. அதன் தொடர்ச்சியாக, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் அமெரிக்காவின் தூதரக ரகசியங்களை வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்தது.

முந்தையவற்றை விட 7 மடங்கு அதிகமாக இந்த புதிய ஆவணங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டது. எனவே, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அரேபியா, ரஷியா உட்பட பல்வேறு நாடுகளையும் அமெரிக்கா முன்கூட்டியே உஷார் படுத்தியது. அதே நேரத்தில், `தங்களுடைய இணையதளத்தை செயல்பட விடாமல் தடுக்கும் `சைபர்` குற்றங்கள் நடைபெறுவதாக` விக்கிலீக் நிறுவனமும் குற்றஞ்சாட்டியது.

எனினும், தங்களுடைய ஆவணங்களை எல்பைஸ், லீ மோண்டே, ஸ்பெய்கல், கார்டியன், நியுயார்க் டைம்ஸ் போன்ற பல்வேறு நாடுகளின் பத்திரிகைகள் மூலமாக வெளியிடப் போவதாக நேற்று முன்தினம் விக்கிலீக் அறிவித்தது.

அதன்படி, அமெரிக்காவில் உள்ள நியுயார்க் டைம்ஸ் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரகசிய ஆவணங்களை நேற்று வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள கார்டியன் உள்ளிட்ட மற்ற பத்திரிகைகளும் இந்த ஆவணங்களை வெளியிட உள்ளன.

உலகம் முழுவதும் 170 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை மூலமாக விக்கி லீக் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த பிரபலமான ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டு பிடித்து வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது. அதுபோல, ரஷிய பிரதமர் புதினுக்கு வைக்கப்பட்ட `பட்டப் பெயர்' குறித்தும் வாஷிங்டனுக்கு மாஸ்கோவில் உள்ள தூதரகம் தகவல் அனுப்பியது.

புதினுக்கும், இத்தாலிய பிரதமர் சில்வினுக்கும் உள்ள உறவு குறித்தும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அமெரிக்க தூதரகமும் உளவு வேலை பார்த்து வருவதாக அந்த ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் சீனாவில் குகூள் இணையதளத்தை சீன அரசு முடக்கிய விவகாரம், அணுசக்தி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா விலக்கி வைத்திருப்பது, அந்த நாட்டு அணுஉலைகளில் யுரேனியம் செறிவூட்டுவது குறித்தும் அவற்றை கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் பின்னர் அந்த முயற்சி தோல்வியடைந்தது குறித்து பல்வேறு முக்கிய ரகசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஈரான் நாட்டின் அணுகுண்டு தயாரிப்பதாகவும் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவை அரேபிய மன்னர் அப்துல்லாவும் வேறு சில வளைகுடா நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்திய தகவல்கள் உள்ளன.

தனது நட்பு நாடுகளையே அமெரிக்கா உளவு பார்த்த அதிர்ச்சிகரமான விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர, ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. மூத்த அதிகாரிகளும் அமெரிக்க உளவு வளையத்துக்குள் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஊழலை வளர்த்தது, அல்கொய்தாவுக்கு கத்தார் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து நிதி வருவது, ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்த விவாதத்தில் இந்தியாவை துருக்கி விலக்கி வைத்தது என பல தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன.

மொத்தம் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஆவணங்களில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு சென்ற தகவல்களாக 3 ஆயிரத்து 38 ஆவணங்கள் இருக்கின்றன.

ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் அவை பற்றிய முழு விபரங்களையும் அறிய முடியவில்லை. அந்த தகவல்கள் வெளிவந்தால், இந்தியாவில் அமெரிக்கா மேற்கொண்ட உளவு வேலைகள் பற்றி தெரியவரும்.

Source : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=44327  ல் சுட்டது நன்றி :நக்கீரன்

Monday, November 29, 2010

காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதி


வாக்காளர்க‌ள்:
மொத்த வாக்காளர்கள்:
ஆண் வாக்காளர்கள்:
பெண் வாக்காளர்கள்:
வாக்குச்சாவடிகள்: 212

போட்டியிடும் வேட்பாளர்கள்:
1.
2.
3.

தற்போதைய எம்.எல்.ஏ.:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

தொகுதி மறுசீர‌மைப்பு:
தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

தொகுதி எல்லைக‌ள்:
காட்டுமன்னார் கோயில் தாலுக்கா

இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11 முறை
தி.மு.க.: 5 முறை வெற்றி
காங்கிர‌ஸ்: 2 முறை வெற்றி
இந்திய‌ ம‌னித உரிமை க‌ட்சி: 2 முறை வெற்றி
காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை: 1 முறை வெற்றி
விடுத‌லைச் சிறுத்தைக‌ள்: 1 முறை வெற்றி

குறிப்புகள்:
* 1962ம் ஆண்டு தேர்தலில்தான் கட்டுமன்னார்கோயில் தொகுதி உருவானது.

* கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.

* சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் காட்டுமன்னார்கோயில் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.

* கட்டுமன்னார்கோயில் தொகுதியில் தி.மு.க.தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.

* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 தேர்தலில் முதன்முறையாக இங்கே வெற்றி பெற்றது.

* 1991 தேர்த‌லில் இந்திய‌ ம‌னித‌ உரிமை க‌ட்சி அ.தி.மு.க‌. ஆதர‌வுட‌ன் இர‌ட்டை இலை சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

* 2001 தேர்தலில் ப‌.சித‌ம்பர‌ம் தலைமையிலான‌ காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை தி.மு.க‌. கூட்ட‌ணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற‌து. அந்த‌ க‌ட்சியின் வேட்பாள‌ர் வ‌ள்ல‌ல்பெருமான் உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் வெற்றி பெற்றார்.

* 2006 தேர்த‌லில் அ.தி.மு.க‌. கூட்ட‌ணியில் போட்டியிட்ட‌ விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் எழுத்தாள‌ர் ர‌விக்குமார் வெற்றி பெற்றார்.

வேட்பாள‌ர்க‌ள் ப‌யோடேட்டா:

2006 தேர்தல் முடிவு:
(விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி)
மொத்த‌ வாக்காள‌ர்க‌ள்: 1,52,743
ப‌திவான‌வை: 1,11,245
வாக்கு வித்தியாசம்: 13,414
வேட்பாளர்களின் எண்ணிக்கை: 8
வாக்குப்பதிவு சதவீதம்: 72.83
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): 57,244
வள்ளல்பெருமான் (காங்கிரஸ்): 43,830
உமாநாத் (தே.மு.தி.க.): 6,556
செல்லக்கண்ணு (அகில இந்திய வள்ளலார் பேரவை): 902
வெற்றிக்குமார் (சுயேட்சை): 843
வசந்தகுமார் (பி.ஜே.பி.): 818

இதுவரை எம்.எல்.ஏ.கள்:
2006 ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
2001 வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயக பேரவை)
1996 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1991 ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி)(அ.தி.மு.க‌. ஆத‌ர‌வு)
1989 தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி)
1984 ஜெயசந்திரன் (காங்கிரஸ்)
1980 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1977 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1971 பெருமாள் (தி.மு.க‌.)
1967 சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1962 கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க‌.)

க‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல் முடிவுக‌ள்:
2001 (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,59,810
பதிவானவை: 1,00,140
வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை): 55,444
சச்சிதானந்தம் (காங்கிரஸ்): 38,927
* காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை தி.மு.க‌.வின் உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

1996 (தி.மு.க.வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,48,333
பதிவானவை: 1,07,391
ராமலிங்கம் (தி.மு.க.): 46,978
இளைய பெருமாள் (இந்திய மனித உரிமை கட்சி): 37,159

1991 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,36,540
பதிவானவை: 95,251
ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி): 48,103
வெற்றி வீரன் (பா.ம.க.): 21,785
* 1991 தேர்த‌லில் இந்திய‌ ம‌னித‌ உரிமை க‌ட்சி அ.தி.மு.க‌. ஆதர‌வுட‌ன் இர‌ட்டை இலை சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

1989 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,23,447
பதிவானவை: 79,791
தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி): 30,877
ராமலிங்கம் (தி.மு.க.): 27,036

1984 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,09,718
பதிவானவை: 87,442
ஜெயசந்திரன் (காங்கிரஸ்): 45,928
தங்கசாமி (தி.மு.க.): 41,796

1980 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,05,613
பதிவானவை: 74,916
ராமலிங்கம் (தி.மு.க.): 44,012
மகாலிங்கம் (சி.பி.எம்.): 29,350

1977 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,04,851
பதிவானவை: 70,200
ராமலிங்கம் (தி.மு.க.): 26,038
ராஜன் (அ.தி.மு.க.): 19,991

1971 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 83,360
பதிவானவை: 65,430
பெருமாள் (தி.மு.க.): 32,847
குப்புசாமி (ஸ்தாபன காங்கிரஸ்): 29,551

1967 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 79,560
பதிவானவை: 65,260
சிவ சுப்பிரமணியன் (காங்கிரஸ்): 30,521
கோவிந்தராசு (தி.மு.க.): 30,387

1962(தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 78,512
பதிவானவை: 61,027
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.): 27,706
வகீசம் பிள்ளை (காங்கிரஸ்): 27,599

இது பார்வையாளர்களுக்கு...
தொகுதியின் பிர‌ச்னைக‌ள், கோரிக்கைக‌ள், வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பதையெல்லாம் பின்னுட்டத்தில் நீங்கள் எழுதுங்களேன்.

Tuesday, November 23, 2010

மேலவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு



சென்னை : சட்ட மேலவை தேர்தலுக்கான வரைவு வாக்காளர்
பட்டியல், மாநிலம் முழுவதும் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் உள்ளிட்ட பணிகளை, டிசம்பர் 7ம் தேதி
 வரை மேற்கொள்ளலாம் என, தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Monday, November 22, 2010

இறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்...!!??

என்ன இது? இறந்த பிறகு யார் அனுப்புவார்கள்? முதலில் எப்படி
கடிதம் எழுத முடியும்?46 யாருடைய இமெயில் அக்கவுண்ட்? என்ற சந்தேகமும், சிரிப்பும், ஒரு வேளை முடியுமோ என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் எழுகிறதா? ஆம் முடியும். இணையத்தில் எதுவும் முடியும்

2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

அரசியல்
அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.

ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்

22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்

நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...

22.5.2009

மதியம் 2 மணி 29 நிமிடம்

41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்...

நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...

நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....

ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...

நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...

ராசா: ஓ...

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

24.5.2009

காலை 11 மணி

5 நிமிடம் 11 விநாடிகள்

நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?

நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம்

- நன்றி: அவுட்லுக்

கனிமொழி - நீரா ராடியா உரையாடல்

22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...

கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.

அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..

...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

22.5.2009

மதியம் 2 மணி 46 நிமிடம்

15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.

22.5.2009

இரவு 8 மணி 04 நிமிடம்

19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.

23.5.2009

காலை 9 மணி 59 நிமிடம்

2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.

- நன்றி: அவுட் லுக்.

வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள்

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை.  அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள்.  அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான்  அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்...

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...

23.5.2009

இரவு 10மணி 26நிமிடம்

42விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...

வீர்: மாறன்.

நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)

ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: | 600 கோடி சரியா?

நீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?

நீரா: இல்லையா?

- நன்றி: "ஓபன்' வார இதழ்.

பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?

22.5.2009

காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட

வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும்.  காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.

பர்கா: சரி.

... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?

நீரா:  அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.

- நன்றி: "ஓபன்' வார இதழ்.

Sunday, November 21, 2010

ஆபீசில் நீங்களும் இப்படி தானா ????(Video)

                                        
 ஆபீசில் காட்சி-1 

Saturday, November 20, 2010

ராசா உயிருக்கு ஆபத்து


இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த திரு ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக பதவி விலக நேரிட்டது. ராசா போலிசாரால் விசாரிக்க நேரிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புள்ள நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களின் தலை உருளக்கூடும் என்பதால் அவர்கள் ராசாவின் தலைக்குக் குறி வைத்து விட்டதாகக் கவலை தெரிவித்துள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

Sunday, November 14, 2010

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



பிரபலங்கள் 20 வருடங்களுக்கு பிறகு

கடைசி படத்தை காணதவரதிர்கள்...

ஹஜ் பெருநாள் குழப்பம் தேவையா


தமிழகத்தில் கடந்த ரமலானில் நோன்பு பெருநாளை எல்லோரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். காரணம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அரபு நாடுகள், வட ஆப்பிரிக்கா நாடுகளில் எல்லாம் பெருநாள் கொண்டாடிய அதே தினத்தில் தமிழத்திலும் பெருநாள் கொண்டாடப்பட்டது.

Saturday, November 13, 2010

இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் : ஆய்வு


கடந்த 23 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டிக‌ளி‌ல் மட்டுமே தோற்றுள்ளது. 12 வெற்றிகள் பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரை சமீபமாக இழக்கவில்லை. இவையெல்லாம் இந்தியாவுக்கு நம்பர் 1 இடத்தைப் பெற்றுத் தந்து இதுவரை தக்கவைக்க உதவினாலும் இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றே தோன்றுகிறது.

Thursday, October 28, 2010

மாதம் 95 ரூபாயில் Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbpsகைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.

Tuesday, October 19, 2010

ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்

கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 17 தேதியன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது.

Thursday, October 14, 2010

சென்னையில் இருந்து 460 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது


460 ஹஜ் பயணிகளுடன், முதல் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா : ஆலோசனைக் கூட்டம்

காட்டுமன்னார்கோவில் : 

                 காட்டுமன்னார்கோவில் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு புறம் போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டியுள்ளவர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணிகளை துவக்கி முடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

Tuesday, October 12, 2010

உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்

 நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.

சிதம்பரத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ

தம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது மெட்ராஸ் ஐ என கூறப்படும் கண் நோய் வேகமாக பொதுமக்களிடையே பரவிவருகிறது. சிதம்பரம் நகரத்தில் வீட்டுக்கு ஒருவருக்காவது இந்த நோய் உள்ளது.

விஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் ஒரு வருடத்திற்கு இலவசம்

 
நண்பர்களே மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனம் ஏவிஜி தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது.  இந்த மென்பொருள் மிகவும் பிரபலமானது.  ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011.

சிந்திப்போம், சீர்பெறுவோம்!

''அற்புதம்'' இந்த சொல்லை சொல்லும்பொதே உற்சாகம் கொப்பளிக்கும்.ஆம்! அபூர்வமான ஒன்றை, கற்பனைக்கெட்டாத ஒன்றை, தனது சக்திக்கு மேலான ஒன்றை, பிரமிப்பான ஒன்றை காணும்பொழுது, இதுவரை அனுபவித்திராத ஒன்றை அனுபவிக்கும்போது மனிதனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் சொல்லே இது என்று சொன்னால்; எவரேனும் மறுக்கப் போகிறீர்களா என்ன!
அற்புதத்தை பட்டியலிடச்சொன்னால் பலருக்கும் தாஜ்மஹலும், பிரமிடுகளும், சைனா சுவரும்தான் நினைவுக்கு வரும்.

Monday, October 11, 2010

Know Ur Mobile Numbers

For Airtel User
Just send
IM to 57070

அதிகமான கொழுப்பு "அந்த" விஷயத்தை பாதிக்குமா?



பொண்ணுங்களுக்கு, ரத்தத்துல இருக்குற அதிகப்படியான இருக்கற கொழுப்பு இதயத்தை மட்டுமில்லாம "அந்த" விஷயத்துல கிடைக்கிற சந்தோசத்தையும் பாதிக்குதாம்ங்க.

அலுவலத்தில் தடை செய்திருந்தாலும் இணையத்தில் உலவலாம்.

உங்கள் அலுவலகத்தில் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளதா? உங்கள் அலுவலக் கணினியில் Ms Outlook / Outlook Express / Thuderbird, மூலம் மெயில் மட்டும் தான் செக் செய்ய முடியுமா?    இனி கவலை வேண்டாம், மெயில் மூலமாகவே நீங்கள் இணைய தளங்களையும் உலாவிட முடியும்.

Sunday, October 10, 2010

Secret Code for China Mobile

User
1122,3344,1234,5676

Engineer Mode
*#110*01#

Restore Setting
*#987*99#

LCD
*#369#

Airtel Free SMS In India

Just Go to message settings and change Message Centre no. to:

+919050563222
or
+919050563221

Codes For Nokia GSM & CDMA Mobiles

Free SMS!!! Send To Any Mobile


Sending By Ur Mobile Numbers

Free SMS !!! Gmail, Yahoo & Rediffmail to any mobile

To send sms freely, you have know the operator and the area of the
service. Then, open your webmail like Gmail, Yahoo, or Rediff and send
email to the MobileNo@OperatorWebsite.com
and the mobile user receives it as a normal SMS, but "from" will show
your email address rather than mobile number and the
messages are delivered instantly like the normal SMS.

Saturday, October 09, 2010

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்னென்ன?

தலைப்பை பார்த்தவுடனேயே அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க ரெடியாகி இருப்பீர்களே! ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் இதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கத்தானே செய்யும்! உங்கள் ஆசைக்கு நான்வேறு எதற்காக குறுக்கே நிற்க வேண்டும்...!
இல்லற வாழ்க்கை இனிதாக அமைய ஆண்களுக்கு இக்கட்டுரை மிகவும் அவசியமே!

Thursday, October 07, 2010

டெண்டுல்கருக்கு சிறந்த வீரர் விருது

இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம்

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.

Wednesday, October 06, 2010

இலவசமாக சவுதியில் மேற்படிப்பு படிக்க - சென்னையில் நேரடி தேர்வு அக்டோபர் 8

சவுதி King Fahd University மற்றும் அமெரிக்காவின் MIT இணைந்து இலவசமாக மேற்படிப்பு படிக்க நேரடி தேர்வு சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரில் (தற்போது நிகர் நிலை பல்கலை கழகம்) வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று நடத்த உள்ளது இன்ஷா அல்லாஹ். பாட பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரம் அட்டாச்மென்டில் உள்ளது. தகுதியான மாணவர்கள் நேரடி தேர்வில் (எழுத்து தேர்வு அல்ல) தகுந்த ஆவணங்களுடன் கலந்துகொள்ளுங்கள். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




தகவல் :

- S.சித்தீக்.M.Tech



நேரடி தேர்வு விபரம் :



Location: B.S.Abdur Rahman University (Formerly Crescent Engineering College)

Venue: Convention Hall

Day and Date: Friday, October 8, 2010

Time: 10:00 A.M





பயிற்றுவிக்கபடும் படிப்புகள் - Graduate programs offered at KFUPM



DISCIPLINEDEGREES

Aerospace EngineeringM.Sc

Architectural EngineeringM.Sc., M. Engg.

Business AdministrationM.B.A., E.M.B.A

Chemical EngineeringPh.D., M.Sc.

ChemistryPh.D., M.Sc.

City & Regional PlanningM.C.R.P.

Civil EngineeringPh.D., M.Sc.

Computer EngineeringM.Sc.

Computer NetworksM.Sc.

Computer ScienceM.Sc.

Computer Science and EngineeringPh.D.

Construction Engineering & ManagementM.Sc.

Electrical EngineeringPh.D., M.Sc.

Environmental ScienceM.Sc.

GeologyPh.D., M.Sc.

GeophysicsM.Sc.

Mathematical SciencesPh.D., M.Sc.

Mechanical EngineeringPh.D., M.Sc.

Medical PhysicsM. Med. Phys.





Mandatory documents for application (without which application will not be processed)

Copy of identification (National ID for Saudi nationals / Passport for international applicants / Iqama for residents of Saudi Arabia).

Complete official transcripts for BS degree (and MS degree if applying to PhD).

Statement-of-Purpose (a one-page essay focusing on career and research goals).

Recommendation Letters from referees through the online recommendation system after submitting the online application.

Other supporting documents (needed for final decision)

Certificates for BS degree (and MS degree if applying to PhD).

TOEFL score (min. is 68 IBT for MS and 79 IBT for PhD).

Acceptable GRE General score (min. Quant. is 700, min. Analytical is 3.0).

Upon approval, original/certified copies of degree certificate(s) and transcript(s) are to be sent through postal mail.
 
 
 

யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்.

எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக யூடியுப் வீடியோவை எந்த
ஃபார்மட்டுக்கும் தகுந்தாற் போல் மாற்றி நம் கணினியில் சேமிக்கலாம்

குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்

''பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கிறோம்ல்ல.. தொந்தரவு பண்ணாத..''
இப்படி ஒரு டயலாக்கை இன்று வரையிலும் சொல்லாத அம்மாவா நீங்கள்? உங்கள் முதுகில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்து கொள்ளுங்கள்

Tuesday, October 05, 2010

காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்

தில்லியில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம்
 துப்பாக்கி சுடும் போட்டிகள் வழியாகக் கிடைத்துள்ளது.

கல்வி தளங்கள்!

இந்திய அரசு, கல்வி மறறும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன. பார்த்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி
தமிழ் இஸ்லாம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஆங்கிலம் கற்க
ஆங்கிலம் கற்க (Spoken English)
ஆங்கிலம்-தமிழ் அகராதி
அரபிக் படிக்கலாம்
தமிழ் இணையம்
தமிழ் டைப்பிங்
ஆன்லைன் தமிழ் - இங்கிலீஷ் - டிக்ஸ்னரி
போட்டித் தேர்வுகள் (Competitive Exams)
தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்
பயனுள்ள மென்பொருட்கள்

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?

நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று,