அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Saturday, November 20, 2010

ராசா உயிருக்கு ஆபத்து


இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த திரு ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக பதவி விலக நேரிட்டது. ராசா போலிசாரால் விசாரிக்க நேரிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புள்ள நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களின் தலை உருளக்கூடும் என்பதால் அவர்கள் ராசாவின் தலைக்குக் குறி வைத்து விட்டதாகக் கவலை தெரிவித்துள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

முன்னாள் அமைச்சர் ராசா உயிருடன் காப்பாற்றப்பட வேண்டுமெனில் அவருக்கு மத்திய அரசு, உச்சப் பாதுகாப்பு தர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் கிடைக்கப்பெற்ற அதிகமான பங்குகள் திமுக, காங்கிரஸ் தலைவர்களுக்கே சேர்ந் துள்ளன. இந்த முறைகேட்டால் அதிகளவு ஆதாயம்பெற்ற அந்தப் பெருந் தலைவர்களால் ராசாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார். இந்தத் தலைவர்கள் பற்றிய யாருக்கும் தெரியாத பல ரகசியங் களை ராசா அம்பலமாக்கி விடுவார் என்ற அச்சத்தில் அவரை தீர்த்துக் கட்டத் திட்டமிட்டுள்ளனர் அந்தத் தலைவர்கள் என்று கூறியுள்ளார் திரு சுப்பிரமணிய சுவாமி.
இதுபற்றி மிட்டே என்னும் பத்திரிகைக்கு பேட்டியளித்த திரு சுவாமி, அந்தத் தலைவர்களது பெயர்களைக் கூற மறுத்து விட்டார். ஆனால் நேரம் வரும் போது பகிரங்கப்படுத்துவேன், இப்போது முடியாது என்று கூறி விட்டார்.
இது பற்றி “மிட்டே” பத்திரிகை, இந்திய உளவுத் துறையிடம் செய்த விசாரணை யில், முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு அப்படி ஒரு கொலை மிரட்டலும் இருப்பதாக எங் களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
அரசாங்க அதிகாரத்தில் உள்ள பெருந் தலைவர்கள் சிலரை தர்மசங்கடத்தில் கொண்டுபோய் விடக்கூடிய அளவுக்கு ராசாவிடம் பல ரகசி யங்கள் புதைந்துள்ளன. இதன் காரணமாக ராசாவைக் கொல் வதற்கு சதித்திட்டம் நடந்து வருவ தாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனவே அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதற்காக துபாயில் அடியாள் நியமிப்பதற்காக வெள்ளைக்காரப் பெண்கள் இருவர் முயற்சி செய்வது தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் இந்தியாவுக்கு வெளியே நடந்த பணப்பரிமாற்றங்கள் பற்றிய விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சு கண்டறிய வேண்டும் என்றும் அதற்கு அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வங்கிகளுக்கிடையேயான ரகசியப் பணப்பரிமாற்றங்களை எளிதில் கண்டறியும் அதிநவீன தொழில்நட்ப அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ளது என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி நடவடிக்கையெடுக்கும்படி தம்மால் கொடுக்கப்பட்ட மனுவுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்பட வில்லை என்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகத் தேவையில்லை. பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர் க்கட்சிகள் நெருக்கடி கொடுத் தாலும் பிரதமர் பதவி விலகுவ தால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது என்று கூறியுள்ளார்.
ராசாவின் பதவி விலகலுக்கு முன் சுப்பிரமணிய சுவாமி, ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மனுக் கொடுத்ததைக் கண்டித்து முன்னதாக திமுக தொண்டர்கள் சுப்பிரமணிய சுவாமியின் கொடும்பாவியை எரித்தனர்.
இப்போது திமுகவினர் தலைவர் வீட்டுத் திருமணம் முடியட்டும் என்று காத்திருக்க லாம் என்றும் திருமணத்திற்குப் பின் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக மீண்டும் ஓர் ஆர்ப் பாட்டம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

Thanks: http://tamilmurasu.com.sg/story/539

0 comments: