அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Wednesday, April 27, 2011

Rddr786:70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணியுடன் சக பயணியை அழைத்துச் செல்ல அனுமதி

சென்னை: ஹஜ் பயணம் செல்லும், 70 வயதுக்கு மேற்பட்ட பயணியுடன், சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல, அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக் குறிப்பு: மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று, 70 வயது பூர்த்தியான பயணி, தம்முடன் ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்கு ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், தம்முடன் சக பயணியாக யாரை அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும். இதற்கான தகுதி குறித்த விவரங்கள், www.hajcommittee.com என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 70 வயது பூர்த்தியானவர்கள், இதுவரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது விண்ணப்பத்துடன், தாம் அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்துடன், தனியே தெரிவிக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் சக பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். ஹஜ் பயணத்தை அவர்கள் ரத்து செய்தால், எக்காரணத்தை கொண்டும், சக பயணிகள் தனியே பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹஜ் பயணிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி தேதி. இதில் மாற்றம் ஏதும் இல்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

http://lalpetexpress.com/?p=1355

Sunday, April 24, 2011

Rddr786:மே 14ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது: 25ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 14ம் தேதி வெளியிடப்படும் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மே 25ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 2ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர் எழுதினர். இவர்களில், மூன்று லட்சத்து, 36 ஆயிரத்து, 443 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 102 பேர் மாணவியர். 1,890 மையங்களில், தேர்வுகள் நடந்தன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்போது, பாட வாரியாக மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி, "டேட்டா சென்டரில்' மும்முரமாக நடந்து வருகிறது. மெட்ரிக் - ஆங்கிலோ இந்திய தேர்வுகள், மார்ச் 22ம் தேதியில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ். எல்.சி., தேர்வுகள், மார்ச் 28ம் தேதியில் இருந்தும் ஆரம்பமாகி, நான்கு போர்டு தேர்வுகளும், ஏப்ரல் 11ம் தேதி முடிந்தது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் விடைத்தாள்கள் திருத்தும் பணி, கடந்த 20ம் தேதி துவங்கியது. கடந்தாண்டு, மே 14ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு, மே 13ம் தேதி, தேர்தல் முடிவு வெளிவர இருப்பதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து, கடந்த வாரம் வரை, உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக, தேர்வுத்துறை மற்றும், "டேட்டா சென்டர்' அதிகாரிகளுக்கும் எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், நேற்று திடீரென, தேர்வு முடிவு தேதிகளை, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டார்.

சென்னை, கன்னிமாரா நூலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், நிருபர்களிடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. எனவே, இதன் முடிவுகள், மே 14ம் தேதி வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மே 25ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதற்கேற்ப, பணிகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவு மட்டும், மே 14ம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும்' என்று அறிவித்தார்.

செயலர் அறிவிப்பு குறித்து, தேர்வுத்துறை மற்றும் டேட்டா சென்டர் வட்டாரம் கூறியதாவது: பிளஸ் 2 ரிசல்ட்டுக்கான பணிகள் திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகின்றன. மே 14ம் தேதி வெளியிடுவதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. அதற்குள், பணிகள் முடிந்துவிடும். ஆனால், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, கடந்த 20ம் தேதி தான் துவங்கியது. மாநிலம் முழுவதும், 66 மையங்களில், இப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள், மே 15ம் தேதி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், டேட்டா சென்டரில் மதிப்பெண்கள் பதியப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட வேண்டும். இவ்வளவு பணிகள் இருக்கும்போது, இப்போதே, "ரிசல்ட்' தேதியை நிர்ணயித்திருப்பது, தேவையில்லாமல், நெருக்கடியை உருவாக்குவது போல் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர்' இணையதளத்தில் முடிவுகள்: மாணவர்களுக்காக, பல்வேறு சேவைகளை செய்து வரும், 'தினமலர்' நாளிதழ், பொதுத்தேர்வு முடிவுகளையும் பல ஆண்டுகளாக இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, 'தினமலர்' இணையதளங்களான www.dinamalar.com, www.kalvimalar.com ஆகியவற்றில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இது தவிர, மொபைல் போன், இ-மெயில் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய வசதி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ‌தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தினமலர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். www.dinamalar.com/registration என்ற முகவரியில் நீங்கள் பதிவு செய்து கொண்டால், தேர்வு முடிவுகள் வெளியானதும் உங்களுடைய ரிசல்ட் மொபைல் அல்லது இமெயில் மூலம் உங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் இவ்வாறு பதிவு செய்தவர்களில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு தினமலர் மற்றும் தாம்பரம் தன‌லட்சுமி பொறியியல் கல்லூரி இணைந்து வழங்கும் சான்றிதழும், ரொக்கப்பரிசும் கிடைக்கும். முதல் பரிசாக ஒருவருக்கு ரூ. 40 ஆயிரம்: இரண்டாம் பரிசாக ஒருவருக்கு ரூ. 25 ஆயிரம்: மூன்றாம் பரிசாக ஒருவருக்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.


http://www.dinamalar.com/

Wednesday, April 20, 2011

Rddr786: ICICI வங்கியில் டிபாசிட் செய்த பணத்தில் ரூ.1.12 லட்சம் "ஸ்வாகா': போலீஸ் விசாரணை

காட்டுமன்னார்கோவில் : வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை ஏ.டி.எம்., மூலம் “ஸ்வாகா’ செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த மாதர் சூடாமணியைச் சேர்ந்தவர் கவுரி (50). இவர் கடந்த ஆண்டு அக்டோ பர் மாதம் லால்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புதிய கணக்கு துவக்கினார்.
இவரது மகன் ஆந்திராவில் வேலை செய்யும் போது இறந்து விட்டதால் அதற்கு இழப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகையை கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி வங்கியில் டிபாசிட் செய்தார். அவ்வப்போது தனக்கு கிடைத்த பணத்தையும் சேமித்ததால் அவரது கணக்கில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் இருப்பு இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வங்கியில் இருந்து 3 மாதத்திற்கான “ஸ்டேட்மென்ட்’ அனுப்பப்பட்டது. அதில் வெறும் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது கண்டு கவுரி அதிர்ச்சியடைந்தார். அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஏ.டி.எம்., மூலம் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி 20 ஆயிரமும், 24ம் தேதி 40 ஆயிரமும், பிப்ரவரி 2ம் தேதி 20 ஆயிரமும், 12ம் தேதி 20 ஆயிரமும், மார்ச் 15ம் தேதி 12 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
 வங்கிக்கு நேரில் சென்று கேட்டபோது முறையான பதில் இல்லாததால் வெறுப் படைந்தார். ஏ.டி.எம்., மையத்தில் கேமரா இருந்தும் பணம் எடுத்தவரை கண்டுபிடிக்க பாங்க் ஆர்வம் காட்டவில்லை என கவுரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே கவுரி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
thanks: தினமலர்

Sunday, April 17, 2011

Rddr 786:வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி



வசதி இல்லாதோருக்கு இலவச ஹஜ் 60 முதல் - 70
 வயது ஹஜ் செய்ய வசதி இல்லாத முதியோருக்கு
 இலவச ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியாவின் முஹம்மது நேசன் குரூப் உதவி செய்கிறது . 
தொடர்புக்கு: 0096626919999


Dear Muslim brothers / sisters, Assalamu Alaykum

This is an important info If u know anyone who is poor & their age is between 60-70 and He / She is unable to do hajj due to Financial conditions

MUHAMMAD NATION GROUP, JEDDAH will make arrangements of HAJJ for such people in free of cost CONTACT NUMBER 0096626919999
Please forward this to others Muslims to get reward of your good deeds on the Judgment day
Wassalam

Saturday, April 16, 2011

Rddr786:தேர்வுகள் முடிந்துவி​ட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது.  மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?
1. ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்துகொள்ள முயற்சிக்கவும் : ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.
2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன்  Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill  என்பது  ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும்.
“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” (குர்ஆன் 3 : 104)
தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள்.  குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill – யை வளர்த்து கொள்ள முடியும்.
கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள் : தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு  (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும்  internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக  மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்
10 மற்றும் +2 – ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு : விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள்.  9 – ஆம் வகுப்பு முடித்து 10 – ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 – ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2  வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள்.  +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள்  தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு  தயாராகுங்கள்.
 +2 – ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :
IIT-JEE – இந்த தேர்வு IIT, IISc – ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 – ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIEEE – NIT  மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 – ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIPMT -  மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் , வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
HSEE – IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்
மாணவர்களே!  நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்.  தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ – மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
S.சித்தீக்.M.Tech

Wednesday, April 13, 2011

Rddr786: Congratulation !!! to Mr. Nazeer ahamed

Mr. Nazeer ahamed complete his Advanced  International Management Training Course Received certification from Dr. Kunal Basu, Professor of Said Business School, Oxford  University.

ADVANCED INTERNATIONAL MANAGEMENT TRAINING PROGRAMME HELD AT DUBAI INTERNATIONAL FINANCIAL CENTER, DUBAI, ON 8th APRIL 201


Mr. Nazeer Ahamed with Dr. Kunal Basu





Saturday, April 02, 2011

rddr786: 28 ஆண்டு கனவு நிறைவேறியது

உலக கோப்பையை வென்றது இந்தியா


மும்பை: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்தியா உலக கோப்பையை வென்றது. 28 ஆண்டு கனவு நிறைவேறியது யுவராஜ் சிங் தொடர்நாயகன் விருது பெற்றார்.




சச்சினுக்காக உலகக் கோப்பையை வெல்வோம் என்ற தோனி மற்றும் இந்திய அணி வீரர்களின் கனவு சச்சினின் சொந்த மண்ணான மும்பையிலேயே நிறைவேறியது.
சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா 
                                        வாழ்த்துகள் !!! வாழ்த்துகள் !!! வாழ்த்துகள் !!! இந்திய டீம்


உலக கோப்பை கிடைக்கப்பெறும் தருணம்