அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Wednesday, April 27, 2011

Rddr786:70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணியுடன் சக பயணியை அழைத்துச் செல்ல அனுமதி

சென்னை: ஹஜ் பயணம் செல்லும், 70 வயதுக்கு மேற்பட்ட பயணியுடன், சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல, அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக் குறிப்பு: மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று, 70 வயது பூர்த்தியான பயணி, தம்முடன் ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்கு ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், தம்முடன் சக பயணியாக யாரை அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும். இதற்கான தகுதி குறித்த விவரங்கள், www.hajcommittee.com என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 70 வயது பூர்த்தியானவர்கள், இதுவரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது விண்ணப்பத்துடன், தாம் அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்துடன், தனியே தெரிவிக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் சக பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். ஹஜ் பயணத்தை அவர்கள் ரத்து செய்தால், எக்காரணத்தை கொண்டும், சக பயணிகள் தனியே பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹஜ் பயணிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி தேதி. இதில் மாற்றம் ஏதும் இல்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

http://lalpetexpress.com/?p=1355

0 comments: