அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, February 27, 2011

RDDR786:முஸ்லிம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகள்

சென்னை, பிப். 26: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் இக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி உடன்பாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனும் சனிக்கிழமை கையெழுத்திட்டனர்.
முஸ்லிம் லீக் கட்சி 2006 பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, அரவாக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தது.
சனிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சில் தி.மு.க. சார்பில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் வ.மு. செய்யது அஹமது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், ஷபிகுர் ரஹ்மான், ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், கமுதி பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்ட மேலவையில் தங்கள் கட்சிக்கு இடம் ஒதுக்குமாறு இத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். உரிய நேரத்தில் உரிய கெüரவம் தரப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாக இக் கட்சி மாநில செயலாளர் காயல் மகபூப் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சியில் தனி சின்னம் : அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டோம். அந்தத் தேர்தலின் போது தங்களுக்கென தனியாக ஒரு சின்னத்தில் போட்டியிடப் போவதாக தி.மு.க. தலைவர்களிடம் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார் என்றும் மகபூப் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க அணியில் ஏற்கெனவே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி உடன்பாடு செய்து கொண்ட இரண்டாவது கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். தி.மு.க. கூட்டணியில் இதுவரை 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Saturday, February 26, 2011

LIVE

உலககோப்பை கிரிக்கெட் போட்டி நேரலை பார்க்க வேண்டிய
இனையதளம்.


 http://rddr786.blogspot.com/p/world-cup-2011-live.html

Friday, February 25, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 8 தொகுதிகள் கேட்போம் : காதர் மொகிதீன்


நாகப்பட்டினம் : தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, வரும் சட்டசபை தேர்தலில் எட்டு தொகுதிகள் கேட்போம் என்று மாநில தலைவர் காதர் மொகிதீன் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் நாகூரில், மாநில தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலர் முகமது அபுபக்கர், பொருளாளர் செய்யது அகமது உட்பட 41 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற திட்டமிட்டு செயலாற்றுவது. தமிழகத்தில் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை மறுப்பதோடு, வற்புறுத்தி கேட்பவர்களுக்கு, "இஸ்லாம் மதம் மாறியவர்' என்று சான்றிதழ் வழங்கப்படுவதால், கல்வி கற்கவோ, அரசு நிதியுதவி, வேலை வாய்ப்பு பெறவோ முடியாத நிலையில் உள்ளனர். மதம் மாறிய முஸ்லிம்களுக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கான சான்று வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், காதர் மொகிதீன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணியில் இடம் பெற்றுள்ள எங்கள் கட்சிக்கு, மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எட்டு தொகுதிகள் கேட்போம். 21 மாவட்டங்களில், 41 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது. கடையநல்லூர், ராமநாதபுரம், முதுகுளத்தூர், பழநி, நாகை, ஆம்பூர், பெரம்பூர் உட்பட எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடிய 21 தொகுதிகள் பட்டியலை, முதல்வரிடம் அளித்துள்ளோம். இருப்பினும், எங்களுக்கு கூட்டணியில் தொகுதி என்பது முக்கியமில்லை. சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக, நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக நாங்கள் எதிர்பார்ப்பில்லாமல் பாடுபடுவோம். இவ்வாறு காதர் மொகிதீன் கூறினார்.

Thursday, February 24, 2011

சில இடங்களில் வேலையும் உள்ளது முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் நாடினால் சிறந்ததை அடைந்து கொள்வீர்கள்

IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (டெப்டி கலெக்டர்), காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.


இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லீம் பட்டதாரிகள் பயன்பெரும் வகையில் தமிழகத்தில் 13 இடங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்விற்க்காக இலவச பயிற்சி நடத்த
படவிருப்பதாக ரேடியன்ட் அகாடமி தலைவர் ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புது கல்லூரியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் சென்னை எஸ்ஐஇடி பெண்கள் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, மதுரை வக்ப் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உட்பட தமிழக்த்தில் 13 இடங்களில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த இலவச பயிற்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ள ரேடியன்ட் அகாடமி ரஹ்மதுல்லாஹ் (9629309314) அவர்களை தொடர்பு கொள்ளாம்

Tuesday, February 22, 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?


Aloneஅதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி


20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.



கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?




பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.

“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?

பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

பதில்: உண்மைதான்! 1991&க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில்¢மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.

எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.

கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...

பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.

வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.

அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.

அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)

அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)

கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.

அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?

ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.

ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.

ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.

நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
http://tmmk.info

Sunday, February 20, 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்


அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது


.thanks:-tmmk.in

Saturday, February 12, 2011

காதலர் தினத்தில் அனைத்து கட்டணச் சலுகைகளும் ரத்து: BSNL அறிவிப்பு

சென்னை: காதலர் தினத்தன்று அனைத்து குரல் அழைப்புகளுக்கும், எஸ்எம்.எஸ்.களுக்கும் கட்டணச் சலுகைகளை ரத்து செய்வதாக பிஎஸ்என்எல் இன்று அறிவித்துள்ளது.

வரும் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை ‘பிளாக் அவுட்‘ தினமாக அறிவித்து அன்று குரல் அழைப்புகளுக்கும், எஸ்.எம்.எஸ்-க்கும் அனைத்துவிதமான கட்டணச் சலுகைகளும் ரத்து செய்து பிஎஸ்என்எல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கும் பொருந்தும். மேலும், இது தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் சென்னை தொலைபேசி பகுதிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வரும் 14-ம் தேதி மட்டும் குரல் அழைப்புகள், குறுந்தகவல்கள் அதன் பிரதான திட்டங்களின் அடிப்படையில் தான் இருக்கும். மேலும், அன்று பூஸ்டர்கள் மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களின் சலுகை கட்டணங்களும் கிடைக்காது.

ஃபிரண்டஸ் அண்ட் ஃபேமிலி சலுகைத் திட்டம் மற்றும் ஆஃப் பீக் நேரங்களில் அனைத்துத் திட்டங்களிலும் குறைவான கட்டணச் சலுகைகள் ரத்து செய்யப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Thursday, February 10, 2011

தாயா, தாரமா?

[ மாமியார் - மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புக்கு அடிப்படைக் காரணம் தன் மீது இருவரும் கொள்கின்ற அன்பின் போட்டிதான் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரு ஆணுக்குப் பெரும் சவால் தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் நடுநிலையாக வாழ்ந்து காட்டுவதே! மற்றெல்லா சவால்களும் இதற்கப்பால்தான்!
ஒரு ஆண்மகன் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த இரு உறவுகளின் உணர்வுகளையும் மதித்து இருவரின் மீதும் தனக்குள்ள அன்பு சரிசமமானது தான் என்பதை எடுத்துக் காட்டி இருவரும் தனக்கு இரண்டு கண்கள் என்று புரிய வைத்து விடவேண்டும். தன்னைப்பெற்ற அன்னை தனக்கு உயிர் போன்றவள். தன் மனைவி உடல் போன்றவள் என்ற உணர்வுடன் இருபக்கமும் ஒரே கண்ணோட்டத்துடன் பாசத்தைப் பொழிய வேண்டும். மனதுக்குள் குறை தொன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தக் கூடாது.

மாமியார் - மருமகள் பிரச்சனை ஏற்பட்டால் அதற்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான் என்பதை உணர்ந்து அதைச் சீர் செய்யத்தக்க நடவடிக்கைகளை உடனே மெற்கொள்ள வேண்டும்.

தாய்க்காக தாரத்தையோ, தாரத்திற்காக தாயையோ வெறுத்து ஒதுக்கக் கூடாது. இருவரும் பெண்கள் தான். பெண்மைக்கு உரிய பலவீனமான குணங்கள் இருசாராரிடமும் இருக்கவே செய்யும். அதை அனுசரித்துச் செல்ல வேண்டும்.]
மாமியார் - மருமகள்
மாமியார் மருமகள் பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை எனலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை அறிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. இதற்கு அடிப்படை, பெண்களின் இயல்புதான். மாமனார் - மருமகன் பிரச்சனை ஏன் எழுவதில்லை? பொதுவாக பெண்கள் தங்கள் வாழ்வுக்கு யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலையில்தான் படைக்கப்பட்டுள்ளார்கள்.

பெற்றெடுத்துப் பேணிப் பாதுகாத்துப் பாலூட்டித் தாலட்டிச் சீராட்டி, வளர்த்து ஆளாக்கிய அருமை மகனின் அன்பு முழமையாக தனக்கே கிடைக்க வேண்டும் என்று தாய் விரும்புகிறாள். அதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் அதற்குக் காரணம் புதிதாக வந்த தன் மருமகள்தான் காரணம் என்று நினைக்கிறாள்.
இதைப்போன்ற மனப்பான்மை புதிதாக வந்துள்ள மருமகளுக்கும் ஏற்படும்தானே! அவளும் ஒரு பெண் அல்லவா? தன் கணவரை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் அவள் எண்ணம்கூட தவறு என்று சொல்ல முடியாதுதான். கணவனின் அன்பு சற்று மாறுபடுவதாக அவளுக்குத் தோன்றும்போது அதற்குக் காரணம் தன் மாமியார்தான் என அவளும் எண்ணுகிறாள்.
ஆக, மாமியார் - மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புக்கு அடிப்படைக் காரணம் தன் மீது இருவரும் கொள்கின்ற அன்பின் போட்டிதான் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரு ஆணுக்குப் பெரும் சவால் தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் நடுநிலையாக வாழ்ந்து காட்டுவதே! மற்றெல்லா சவால்களும் இதற்கப்பால்தான்!
ஒரு ஆண்மகன் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த இரு உறவுகளின் உணர்வுகளையும் மதித்து இருவரின் மீதும் தனக்குள்ள அன்பு சரிசமமானது தான் என்பதை எடுத்துக் காட்டி இருவரும் தனக்கு இரண்டு கண்கள் என்று புரிய வைத்து விடவேண்டும். தன்னைப்பெற்ற அன்னை தனக்கு உயிர் போன்றவள். தன் மனைவி உடல் போன்றவள் என்ற உணர்வுடன் இருபக்கமும் ஒரே கண்ணோட்டத்துடன் பாசத்தைப் பொழிய வேண்டும். மனதுக்குள் குறை தொன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தக் கூடாது.
‘தன் மனைவியின் காரணமாக தாயின்மீது தனக்குள்ள அன்பும் பாசமும் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை’ என்று மகன் தாயிடம் அதிக பாசம் காட்டினால் அந்தத் தாய் மருமகளை நேசிப்பாள். அதே போல ‘தன் தாயின் தூண்டதலாலேயே உன்ன நான் மேலும் நேசிக்கின்றேன்’ என்று மனைவியிடம் காட்டிக் கொண்டால் மருமகள் மாமியாரைத் தன் தாய்ப்போல் கருதுவாள். இவ்வாறு அன்பை இருபக்கமும் ஆண்கள் பொழிந்;தால் குடும்பத்தில் பிரச்சனைக்குறைவு.

பொய்கூட சொல்லலாம்
இவ்வாறு நடந்து கொள்ளும்போது சில சமயங்களில் பொய் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் மனைவியிடம் பொய் சொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

‘மனிதன் மூன்று விஷயங்களில் பொயப்; பேசலாம். 1. போர்க் களங்களில், 2. இரவருக்கிடையே சமாதானம் செய்வதற்காக, 3. தன் மனைவியைத் திருப்தி படுத்துவதற்காக’ என்ற நபிமொழியை நினைவில் கொண்டு செயல்பட்டால் இருவரையுமே சமாதானம் செய்து வாழ்வது சிரமமானதல்ல, எளிதானதுதான்.
பெண்களை நிர்வகிக்கும் திறமை ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற திருக்குர்ஆனின் கூற்றும் இவ்விஷயத்தில் ஆண்களின் கடமையை உணர்த்துகிறது.
மாமியார் - மருமகள் பிரச்சனை ஏற்பட்டால் அதற்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான் என்பதை உணர்ந்து அதைச் சீர் செய்யத்தக்க நடவடிக்கைகளை உடனே மெற்கொள்ள வேண்டும்.
தாய்க்காக தாரத்தையோ, தாரத்திற்காக தாயையோ வெறுத்து ஒதுக்கக் கூடாது. இருவரும் பெண்கள் தான். பெண்மைக்கு உரிய பலவீனமான குணங்கள் இருசாராரிடமும் இருக்கவே செய்யும். அதை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
மாமியார் மருமகள் இருவரும் ஒத்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவ்விருவரும் தனித்தனியாக வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதும் இருவருக்கும் நாம்தான் செலவு செய்ய வேண்டும். இருவரையுமே பாசத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு ஆணும் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அது, சுவர்க்கம் தாயின் காலடியில் தான் உள்ளது மனைவியின் மடியில் அல்ல. உலகில் நாம் எந்த தவறைச் செய்தாலும் அல்லாஹ் நாடினால் மன்னித்து விடலாம். ஆனால், பெற்றோருக்கு இழைக்கும் துன்பத்திற்குரிய தண்டனையை மட்டும் இம்மையிலேயே வெகு சீக்கிரத்தில் அனுபவித்தே தீர வேண்டும். ஏனெனில் பெற்றோரின் மனக் கொதிப்பு நிச்சயம் பாதிக்கும். நாம் வேறு வகையில் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் சரியே.
தொகுப்பு : மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ  www.nidur.info

புனிதப் போராளி பழனிபாபாவின் பயணம்…


அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் “பாபா” என்று அறிமுகப்படுத்துவார்
அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனது ஊர் பற்றி குறிப்பிடும்போதும் அங்குள்ளவர்கள் கேட்கும்போதும், பழனிக்கு பக்கத்தில் உள்ள புது ஆயக்குடி என்று சொல்லுவார். இவை இரண்டும் காலப்போக்கில் பழனிபாபா என்று உருமாறியது. மறைந்த இந்திய பிரதபர் இந்திரா காந்தி அவர்கள் தான் முதன்முதலில அஹமது அலியை பழனிபாபா என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தவர்

பழனிபாபா

பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது. புது ஆயக்குடி. இக்கிராமமே பழனிபாபாவின் தாய்வழிப் பூர்வீக ஊர். தந்தையின் ஊர், நீலகிரி மாவட்டம் குன்னூர். தந்தை பெயர் என்.எ.முஹம்மது அலி தாயார் பெயர் கதீஜா பீவி குன்னூரில் காப்பி கொட்டை ராவுத்தர் என்று இவரது தந்தையை அழைப்பார்கள். பழனிபாபா பெற்றொருக்கு நான்கவது குழந்தையாக 14/11/1950ல் பிறந்தார். அஸ்ரப் அலி, லியாகத் அலி, முபாரக் அலி ஆகிய சகோதரர்களும் ரெஜினா சுல்தான், ரூபினா சுல்தான், ஜரினா சுல்தான் ஆகிய 3 சகோதரிகள் உடன் பிறந்தவர்கள். மிகவும் அன்பான, நேசமான, பொருளாதார நிலையில் வசதியாக இருந்த குடும்பம்.
ஆரம்பக் கல்வி

பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பழனிபாபா குன்னூரில் உள்ள செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (I.D.O) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

பட்டப்படிப்பு

பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று முடித்தார். அதன் பிறகு டெல்லியில்10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார். படிப்பில் பிடிப்பு, ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக் கூர்மை உடைய பாபா அவைகளையே தனது ஆயுதமாக பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.

பொது வாழ்க்கை

நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின ஆயிரக்கணக்கான மேடைகளில் அடைமழையென, புயலென, அழகான அற்புதமான புள்ளிவிபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய இளைஞர்களின் தேசிய கீதமானது. பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை மாவட்டம்.திட்டச்சேரியில் நடைபெற்றப் பொதுக்கூட்டமாகும்.
தனது துணிச்சலான பொது வாழ்க்கை நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் குடும்ப வாழ்க்கையையும், பந்த பாசப்பினைப்பினைபுகளையும் விட்டுவிலகி வாழ்ந்து வந்தார். அவரது 30 ஆண்டுக்கால வாழ்க்கை அவரைப் புரிந்து கொண்டவர்களுடனும், நண்பர்களுடனுமே இருந்தது. தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார். தனக்கென ஒரு இல்லற வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை அது பற்றி தன் நண்பர்களுடன் பேசும் போது “பொது வாழ்க்கை, பிரச்சாரம் என்று ஊர் ஊராக திரியரவன் கல்யாணத்தை வேறப் பண்ணிக்கிட்டு ஒரு பெண்னுடைய வாழ்க்கையையும் நிம்மதியில்லாமல் ஆக்கனுமா?” என்று கூறுவார்.
ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர். முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. “யார் இந்த பழனிபாபா?” என்று தமிழக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் போட்ட தடை ஆணையில், “தாடி வைத்த, நடுத்தர வயதுடைய, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அஹமது அலி என்கின்ற பழனிபாபா அரசாங்க அலுவலத்துக்குள் நுழைய தடை ” என்று எழுதியிருந்தது. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் தடை உத்தரவுக்கு டெல்லி உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றார் பாபா. தடைஆணைக்கே தடைஆணைப் பெற்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவில் பழனிபாபா ஒருவர் தான். இவ்வாறே தடா வழக்கு பதிவு செய்யப்பட்டும். கைது செய்ய இயலாத சூழ்நிலையை இந்தியாவில் ஏற்படுத்திய ஒரே மனிதரும் பழனிபாபா தான்!.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில், ‘பழனிபாபா பொது கூட்டங்களில் பேசக்கூடாது’ எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து,மைக் வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, “மக்கள் கிட்ட பேசுறதும், உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான் ” என்று காமண்ட் அடித்தார்.
இந்து பாஸிஸம், தமிழகத்தில் “தேசியம்” என்ற வடிவிலும், ‘நாட்டுப்பற்று‘ என்ற போர்வையில் தலையெடுத்த போது அதற்கு பதில் சொல்லத் தளைப்பட்டார். இந்துத் தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு ஆங்கிலத்தில் அரசியல் நிர்ணயச்சட்டம்;வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கள் மக்களைக் கவர்ந்தன.
பழனிபாபாவின் பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள்.. அடிக்கடி கைது செய்தது பழனிபாபாவை ஒரு “தீவிரவாதி“யாகக் காட்டவே தவிர, அவர் ஓரு குற்றவாளி என்பதால் அல்ல. காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட தே இல்லை!
ஆனால், பழனிபாபாவை “தீவிரவாதி“யாகக் காட்டும் உத்தியில் பார்ப்பன பத்திரிக்கைகளும், காவல்துறையும் வெற்றி பெற்றது.வாக்குரிமையை முறையாக பயன்படுத்த முன்வராத சமுதாயத்தில் பிறந்து, நீதிமன்றனகளை, சமுதாய எழுச்சிக்காக முறையாக பயன்படுத்திக் கொண்டவர்தான் பழனிபாபா.
நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, தனது பேச்சுரிமையை நிலைநாட்டியதால்தான். பழனிபாபாவால் இத்தனை காலம் மக்களுக்காக பொது மேடைகளில் பேச முடிந்தது. இல்லையெனில், பழனிபாபாவை துவக்க காலத்திலேயே அரசாங்கம் முடக்கி போட்டிருக்கும்.
பல நேரங்களில் இந்து பாஸிஸவாதிகளின் நரகல் நடைப் பேச்சுகளுக்கு அதே தொனியில் இவர் பதில் சொல்ல முற்பட்டதாலும்,இழப்புக்கு மேல் இழப்பு, இழிவுக்கு மேல் அழிவு என முஸ்லிம் சமுதாயம் மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளான போதும்,பாபா தன் ஆதங்கத்தை அப்படியே வெளிக் காட்டினார். இந்து பாஸிஸ பேச்சாளர்கள் பேசும் பேச்சுகளோடு ஒப்பிடும் போது பழனிபாபா பேச்சு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
பழனிபாபாவின் ஆதங்கத்தைக் கிளறியப் பேச்சாளர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் மீது குற்றம் கூடச் சுமத்தவில்லை.

வழக்குகள்
பழனிபாபா மீது 136 வழக்குகள், 125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும், கருணாநிதி ஆட்சியில் 2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா (1991 – 1995) ஆட்சிக்காலத்தில் 1 முறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்.
மற்றொரு முறை ஜெயலலிதா (1991- 1995)ஆட்சிக்காலத்தில் பழனிபாபா மீது தடா சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. அதில் பாபா உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடி நிரபராதி என விடுதையானார்.
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன், துனை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்) திருப்பதி கோவிலுக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார்.
அதன்பின் “சென்னை உயர்நீதிமன்றம்” தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.

எழுத்துப்பணி
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்து? என்ற இராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார். மறுப்புரை நூல் பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. மறுப்புரை நூலுக்காக கருணாநிதி இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பழனிபாபாவை கைது செய்தார். மறுப்புரை நூல் மீது இருந்த தடையை நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையை நீக்க ஆணை பெற்றார்.
கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்துவம் தொடர்பாக கிறிஸ்துவ பாதிரிமார்களோடு இவர் நடத்திய விவாதம், பாபாவின் பைபிள் பற்றிய ஆய்வு கிறிஸ்துவத்திலும் (பைபிள்) பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. அதன் வெளிப்பாடே “பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? என்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான்Who Is Law Abiding On The Issue Of Babri Masjid? நூலாகும்.
இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார். பாபாநடத்திய “அல்முஜாஹித்”, “முக்குல முரசு”, “புனிதப்போராளி”, ஆகிய பத்திரிக்கைகள் மூலம். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தனது பத்திரிக்கைகள் வாயிலாக அம்பலப்படுத்தினார். பத்திரிக்கைகள், நூல்கள், மேடைபேச்சு, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு, இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல் பணியாற்றிய பல்துறை வித்தகர் அல்ஹாஜ் பழனிபாபா!.

வெளிநாட்டு பயணம்
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.
1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக் கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர். புருனே நாட்டின் சுல்தான் பழனிபாபாவின் இனிய நண்பர்களில் ஒருவர்..

இறுதிக் காலம்
கடந்த சில வருடங்களாகவே தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை அமைதியாக அதே சமயம் ஆக்கப்பூர்வமாக செய்து வந்தார்.
ஊர் ஊராக சென்று சமுதாய இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து, வெளிநாட்டில் வாழும் சமுதாய சொந்தகளிடம் கடிதத் தொடர்பு கொள்வதுடன் தனது ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளை அனுப்பி அவர்களின் ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் பெற்று “ஜிஹாத்” கமிட்டி மூலம் பல ஏழை எளிய சமுதாய மக்களுக்கெல்லாம் பண உதவிகள் செய்து வந்தார்.
தடா கைதிகளின் குடும்பத்தினர் முகவரிகளை எல்லாம் சேகரித்து, அவர்களுக்கு மாதாமாதம் குடும்பச் செலவிற்கு பணம்(மணியாடர்) அனுப்பி உதவிவந்தார். இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பிற்காக ஜமாத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை ஒருங்கிணைத்தார். அதேபோல இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை உருவாக்கிக் காண்பித்தவர் பழனிபாபா.
இதனால் முஸ்லிம்களைப்போல் பிற சமுதாயத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது.இந்த மூன்று சமூகங்களும் அரசியல் அதிகாரத்தில் ஆளும் ஜாதியாக இல்லாமல், ஆளப்படும் ஜாதி என்பதை கண்டுணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை புறாக்களோடும்,இயற்கையோடும் கழித்தார்.

மறைவு

1997 ஜனவரி 28ந் தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து விட்டு அவரை 7:30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் 9:30 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து, தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஒருவன், ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும், முகத்திலுமாக 13 வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார். இந்துத்துவாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். மறுநாள் 29-ம் தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30மணிக்கு ஐ.டி.ஒ. (IDO) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.

பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின் வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர்யதார்த்தவாதி என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியை, முன் அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த அல்ஹாஜ் பழனிபாபா இஸ்லாமிய ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர் எனலாம்.
தொகுப்பு :லால்பேட்டை.காம்

Wednesday, February 09, 2011

பிச்வசாரத்தில் படகு தொழிலாளர்கள் ஸ்டிரைக்

 சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பணியாற்றும் படகு இயக்கும் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிச்சாவரம் மையத்தில் 35 பேர் படகு இயக்கும் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். பிச்சாவரம் வனப்பகுதியில் தனியார் படகுகளை இயக்குவதால் தங்களது வருமானம் பாதிப்பதால் தனியார் படகுகளை இயக்கத் தடை விதிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, படகு இயக்கும் போது சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்கள், தனியார் படகுத் தொழிலாளர்களை தடுத்துள்ளனர்.

அப்போது தனியார் படகுத் தொழிலாளர்கள் சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுற்றுலா மைய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி தலைமையில் படகுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை படகுகளை இயக்காமல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அங்கு சென்று சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனால் காலை 10 மணி முதல் 11 மணி வரை படகுகள் இயக்கப்படாததால் 1 மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர்.

Tuesday, February 08, 2011

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14 ம் டிசம்பர் 1 நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காகசெய்யப்ட டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

-தொகுப்பு:

எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி

செய்தி நன்றி:-tntj.net

Friday, February 04, 2011

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் மமக குழுவினருடன் பேச்சுவார்த்தை




வரும் சட்டமன்றத் தேர்தலில் சகல துறைகளிலும் மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களால் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன்  ஆகியோரை கொண்ட அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலி, ஒ.யு. ரஹ்மதுல்லாஹ். ப. அப்துல் சமது, எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோரை உள்ளடக்கிய மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவினர் அதிமுக தலைமையகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிப வியுகங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது. சிறுபான்மை சமுதாயத்தின் கோரிக்கைகளும் அதிமுக குழுவினருடன் மமக தலைவர்க எடுத்துரைத்தார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி போ்ட்டியிட விரும்பும்  தொகுதிப் பட்டியல் அதிமுக குழுவினரிடம் வழங்கப்பட்டது. இது முதல் சுற்று பேச்சு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சு வார்த்தை முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அதிமுக குழுவினருடனான பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்ததாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெற் பாடுபடுவோம். பீகாரைப் போல் எதிர்கட்சியை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதிமுக கூட்டணி வெற்றிப் பெற் பாடுபடுவோம் என்று குறி்ப்பிட்டார்.

 

Wednesday, February 02, 2011

இஸ்லாமிய உலமாக்களுக்கு இலவச சைக்கிள்

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும் அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த  உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும் தமிழகக் கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டதைப் போல இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  முதல்வர் கருணாநிதி ஏற்று –  உலமாக்களுக்கும்,  மோதினார்களுக்கும்  இலவசமாக சைக்கிள்  வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா, 2 அதிகாரிகள் கைது-சிபிஐ அதிரடி,அதிர்ச்சியில் திமுக!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரை சிபிஐ இன்று கைது செய்தது.

Tuesday, February 01, 2011

திமுகவுக்கு ஆதரவு இல்லை! தவ்ஹீத் ஜமாத் முடிவு

சேலம்: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு  5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க., ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது' என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக பி. ஜெயினுல்ஆபிதீன், பொது செயலர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய் மற்றும் ஏழு செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழு முடிந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் ஜெயினுல்ஆபிதீன் கூறுபோது தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது. இந்த பிரச்னைகளை களைய கண்காணிப்பு குழு அமைப்பதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
மேலும், இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். கடந்த எம்.பி. தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு நாங்களும் காரணம். அதனால், வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு தான் ஆதரவு தெரிவிப்போம்.
எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டோம். இவ்வாறு ஜெயினுல் ஆபிதீன் கூறினார்

முஸ்லிம்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்த தொல்லியல்துறைக்கு அபராதம்!

தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத முஸ்லிம்களுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அந்தத் துறைக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நல்ல முகமது என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்', `கியூரேட்டர்' (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான், 4 பதவிக்கும் விண்ணப்பித்தேன். கியூரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தேர்வில் கலந்துகொள்ள முடியாதபடி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

நான் இந்து மதத்தை சேராதவர் என்பதால் எபிகிராபிஸ்ட் உள்ளிட்ட 3 பணிகளை வழங்க முடியாது என்றும், கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் காரணம் கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.11.09 அன்று பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவுக்கு பதில் மனுவை தாக்கல் செய்த தொல்லியல்துறை, தொல்லியல்துறையில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் அந்தப் பதவிக்கு அவரை ஏற்கவில்லை. கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தொல்லியல்துறை, இந்து சமய துறையின் கீழ் வருவதல்ல. அங்கு சில பணிகளுக்குத்தான் இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. எனவே தொல்லியல் பணிகளை இந்துக்களுக்குத்தான் என்று மதத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.

கியூரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவிக்காமல், பிறகு அந்த காரணத்தை கூறி விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை பிரதிவாதிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Thanks: http://www.inneram.com/2011020113281/2011-02-01-05-13-33

மார்ச் 2 ல் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு செயல்முறைத் தேர்வு!

தமிழகத்தில் பிளஸ் 2  பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் மூலம் 7.30 லட்சம் பேரும், நேரடியாக 52 ஆயிரம் மாணவ, மாண விகளும் தேர்வு எழுது கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல், தேர்வு எண் ஆகிய விவரங்கள் அனைத்துப் பள்ளி களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் வரும் 3ம் தேதி பிளஸ் 2 செயல்முறை (பிராக்டிகல்) தேர்வு தொடங்குகிறது. பிப்ரவரி 23ம் தேதிக்குள் செயல்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் 4.52 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த செயல்முறைத் தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

இச்செயல்முறைத் தேர்வுக்கு  50 மதிப்பெண்கள் தரப்படுகிறது. இதைக் கண்காணிக்க அந்தந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவரும், வேறு பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு நடப்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி

"முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர் அலாவுதீன் மகள் முஸ்பிரா மைமூனுக்கும், அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் இலக்கிய அணியைச் சேர்ந்த -ஹிதாயதுல்லா மகன் ரஷீத் அரபாத்துக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.
இத்திருமண விழாவில் கலந்துகொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

"முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற ஹிதாயதுல்லாவின் கோரிக்கைகளை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு முன் எனக்கென்று ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசில் சில அமைச்சர்கள் இருக்கிறோம். எல்லாரும் கலந்து பேசி அதற்கு பின் தான் இதை வெளியிட முடியும். அதுவரை பொறுமையாக இருங்கள்" என்று கூறினார்.

இதனிடையே இட ஒதுக்கிட்டை 5 சதவீதமாக உயர்த்தும் கட்சிகே ஆதரவு என்று
 தவ்ஹீத் ஜமாஅத்  அதிரடியாக அறிவித்துள்ளது இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்று அதன் தலைவர் பி.ஜெய்னுல்ஆப்தீன் அறிவித்துள்ளார்.
நன்றி:தினமலர், இந்நேரம் & http://kollumeduxpress.blogspot.com/

சட்ட படிப்பு படிக்க CLAT நுழைவு தேர்வு

இந்தியாவில் உள்ள 11 சட்ட பல்கலை கழகங்களில் சட்ட படிப்பு படிக்க CLAT (Common Law Admission Test) என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றது. இதற்க்கான விண்ணப்ப படிவம் தற்போது விணியோகிக்கப்பட்டுகொண்டு இருக்கின்றது. பொதுவாகவே இந்த நுழைவு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு, சுமாராக படித்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம். தற்போது பெரிய அளவில் மாணவர்கள் சட்ட படிப்பில் ஆர்வம் காட்டாததால் இந்த தேர்வில் அதிகம் போட்டிகள் இருக்காது.

சட்ட படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதி எளிதில் சட்ட படிப்பு படிக்கலாம்.கல்வி தகுதி : 12 – ஆம் வகுப்பு அல்லது டிப்ளோமா படித்து இருக்க வேண்டும். +2 வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம். +2 ஆம் வகுப்பில் குறைந்தது 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 வயது
விண்ணப்பம் வாங்க கடைசி தேதி : 24/02/11
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 2/04/11
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தலைமை தபால் நிலையங்கள்
விண்ணப்பத்தின் விலை : ரூ.150
தேர்வு கட்டணம் : ரூ.2,500
தேர்வு நடைபெறும் நாள் : 15/05/11
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள் : 28/05/11
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

The Convenor, Common Law Admission Test, CLAT-2011, The West Bengal National University of Juridical Sciences, Kolkata, Dr. Ambedkar Bhawan, 12 L.B. Block, Sector – III, Salt Lake City, Kolkata 700 098.

தேர்வை பற்றி : இந்த தேர்வு 5 பாடங்களை கொண்டது, ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, Aptitude மற்றும் Logical Reasoning. இந்த 5 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும்.
இந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் http://www.clat.ac.in/ இந்த இணைய தளத்தில் உள்ளது.
நன்றி :S.சித்தீக்.M.Tech
TNTJ STUDENTS WING

& http://kollumeduxpress.blogspot.com/

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான்.
ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்றுண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.
இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.
இந்த சுய இன்பத்தைப் பற்றியோ அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியோ பெரும்பாலானவர்கள் பெரிதாக எதையும் நினைப்பதில்லை.அதற்க்கு மிக முக்கியமான காரணம் ஒரு சில வைத்தியர்களும்,ஆய்வாளர்களும்,அதுபோல் சில கட்டுரையாளர்களும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்ற கருத்தை மக்களிடம் விதைப்பது தான்.
முதலாவதாக இஸ்லாமிய மார்க்கம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விட்டு விஞ்ஞான ரீதீயாக இவர்களின் கருத்து எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.
முதலாவது ஒருவன் சுய இன்பத்தினை நாடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விஞ்ஞான உலகம் கூறும் போது பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.
1.தான் விரும்புகின்ற அல்லது ஆசைப்படுகின்ற பெண்னை அடைய முடியவில்லை என்பதால் அவளுடன் இருப்பதாக என்னிக் கொண்டு இந்த நிலைக்கு சிலர் சென்று விடுகின்றனர்.
2.தனிமையை அதிகம் விரும்புவது.
3.பாடசாலை,அல்லது கல்லூரியில் தன்னுடன் சேர்ந்திருக்கும் கெட்ட நண்பனின் தீய நடவடிக்கைகளால்.
4.அடிக்கடி ஏற்படுகின்ற தீய எண்ணங்கள்.
5.ஆபாச திரைபடம்,அல்லது புகைப்படங்களின் மோகம்.
இது அல்லாத இன்னும் பல காரணங்களைக் கூறினாலும் மிக முக்கியமானவைகளைப் மட்டுமே இங்கு நாம் பட்டியலிட்டுள்ளோம்.
இந்த வகையில் இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இஸ்லாம் என்ன தீர்ப்பைச் சொல்கிறது?
எந்நேரமும் நம்மை அல்லாஹ் கண்கானிக்கிறான் என்ற பயம் இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“மனிதர்களே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துனையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.எவனை முன்னிருத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கிறான்.” (4:1)
மனிதர்கள் பாவம் செய்யும் போது அல்லாஹ்வின் பயம் அவர்களிடம் இல்லாமல்ப் போய் விடுகிறது அதன் காரணத்தாத் தான் அல்லாஹ்வை மறந்து சிறு பாவம்,பெரும் பாவம் என எல்லாவெற்றையும் செய்கிறார்கள்.இப்படி பாவம் செய்ய துணியும் போது அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்பதை நினைத்து உடனே அதை விட்டும் நீங்கி விட வேண்டும்.
ஆனால் இந்த சுய இன்பம் என்ற பாவம் தொடர்ச்சியாக செய்யப் படும் போது அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற பயம் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சுய இன்பம் ஒரு வகையான விபச்சாரமே!
“(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.”(23:5,6,7)
மேற்கண்ட திருமறை வசனத்தில் அல்லாஹ் கூறியபடி வாழ்பவர்கள் தம்முடைய இச்சைகளைத் தீர்க்க நாடினால் தங்கள் மனைவியரிடத்தில் அல்லது தமது அடிமைகளிடத்தில் மாத்திரம் தான் தீர்த்துக் கொள்வார்கள் அதுவல்லாத வேறு எந்த வழிகளையும் நாட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.இந்த வசனத்தில் இறைவன் பயன் படுத்தும் வேறு வழிகள் என்ற வாசகத்திலிருந்து சுய இன்பமும் அதிலே அடங்கும் என்பதை அறியலாம்.
அது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இதைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது.” (நூல் : அஹ்மத் 10490)
மேற்கண்ட நபி மொழியில் நபி(ஸல்)அவர்கள் விபச்சாரம் எந்தெந்த உருப்புகளின் மூலம் உருவாகும் என்பதைப் பற்றி தெளிவு படுத்துகிறார்கள்.
அதில் கண்களின் மூலம் விபச்சாரம் நடக்கிறது என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இஸ்லாம் தடுக்கக் கூடிய காட்சிகளை பார்த்தல்,அண்ணியப் பெண்களை கெட்ட எண்ணங்களில் பார்ப்பது,ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.
இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இதில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு உதவி செய்வதும் அடங்கும்,அதிலும் குறிப்பாக நாம் தற்போது பேசிக்கொண்டிருக்கும் சுய இன்பம் தான் இதன் மூலம் நேரடியாக குறிப்பிடப் படுவதையும் நாம் அறியலாம்.
ஏனெனில் இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு மிக முக்கியமானது இந்தக் கைகள் தான் இந்தக் கைகளின் மூலம் தான் இன்றைய இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக மருத்துவ உலகம் உருதிப் படுத்துகிறது.
அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது.
“(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.” (23:5,6,7)
உண்மையில் அல்லாஹ்வை கடவுளாக ஏற்று தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய ஆபாச உணர்வுக்கான தேவையை அல்லாஹ் கூறிய இரண்டு வழிகளில் மாத்திரம் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளை தேடக்கூடாது.
அதிலும் அல்;லாஹ் கூறக்கூடிய இரண்டாவது வழிமுறை நம்முடைய காலத்தில் நடைமுறையில் இல்லை என்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்களின் உடலுறவுத் தேவையை தமது மனைவியிடத்தில் மாத்திரம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியல்லாதவர்களுடன் தனது தேவையை பூhத்தி செய்வதற்கு முனைவதோ,அல்லது சுய இன்பம் போன்றவற்றில் ஈடுபடுவதோ அல்லாஹ்விடத்தில் வரம்பு மீறிய குற்றத்தை ஏற்படுத்தும் என்பது மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது
“(மறுமை நாளில்) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.” (24:24)
“இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.” (36:65)
“முடிவில் அவர்கள் அங்கே வந்ததும், அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.” (41:20)
மேற்கண்ட குர் ஆன் வசனங்களில் மறுமை நாளின் விசாரனை பற்றி மிகத் தெளிவாக இறைவன் எடுத்துரைக்கிறான்.
மறுமையில் ஒவ்வொரு உருப்பும் தாம் செய்தவைகளைப் பற்றி விசாரிக்கப் படும். அப்போது தாம் செய்த நல்ல கெட்ட காரியங்களுக்கு அந்த உருப்புகளே சாட்சியாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
ஆக சுய இன்பம் போன்ற காரியங்களை நாம் செய்வதின் மூலம் மறுமை விசாரனையில் அல்லாஹ்விடத்தில் நமது உருப்புகளே நம்மைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் வரம்பு மீறியோராகி, நஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்.
அதே போல் இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் விபச்சாரம் செய்வதற்காக செல்லுதல்,அல்லது அதற்கு உதவி செய்வது, ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு செல்லுதல், இஸ்லாம் தடுத்த இடங்களுக்கு செல்லுதல் போன்றவைகள் கால்களால் செய்யும் விபச்சாரத்தில் அடங்கும்.
இதிலிருந்தும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பை கேட்க வேண்டும்.
சுய இன்பத்தின் மூலம் ஏற்படும்(உடலியல்)விபரீதங்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சுய இன்பம் என்ற மிகக் கொடூரமான மன நோயை பெரும்பாலான மருத்துவர்களும்,விஞ்ஞானிகளும் கூடாது என்று தடுத்தாலும் ஒரு சிலர் இதனை ஆதரிக்கவும் செய்கின்றனர்.
இப்போது அவர்கள் சுய இன்பத்தை ஆதரிப்பதற்கு கூறும் காரணத்தையும்,வாதங்களையும் அதில் உள்ள தவறுகளையும் ஆராய்வோம்.
அவர்களின் வாதம்:
சுய இன்பத்தின் மூலம் ஒருவன் யாருக்கும் தொந்தரவுகளைக் கொடுக்காமல் தனிமையில் அவனது தேவையை தீர்த்துக் கொள்கிறான் இதன் மூலம் அவன் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நாடுகிறானே தவர யாருக்கும் கெடுதி செய்யவில்லை.
நமது பதில்:
ஒருவன் யாருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்க்காக ஒரு குற்றத்தை ஆதரிப்பது ஒரு அறிவாளியின் செயல் அன்று. அத்துடன் இப்படிப் பட்டவர்கள் இதுவல்லாத மற்ற எல்லா குற்றங்களுக்கும் இந்த அளவுகோளையே வைப்பார்களா? யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல் ஒருவன் போதை மாத்திரைகளையோ,அல்லது போதை ஊசிகளையோ பயன்படுத்தினால் இவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? மறுக்கிறார்களா? மறுக்கத் தான் செய்கிறார்கள்.
ஏனெனில் அது உடலுக்கு கேடானது என்பதுதான் அவர்களின் பதில். அதுபோல் சுய இன்பமும் உடலுக்கு கேடானது என்பதில் சந்தேகமில்லை. (இதைப் பற்றி பின்பு விரிவாக விளக்கப் படும்.) ஆக ஒரு குற்றத்தை தடுத்தல் என்ற முடிவுக்கு வரும் போது அது அவனுடன் மட்டும் தொடர்பு பட்டாலும், மற்றவர்களுடன் தொடர்பு பட்டாலும் குற்றம், குற்றமே!
அவர்களின் வாதம்:
சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப் படும் இந்திரியமும், தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதே! தூக்கத்தில் அறியாமலும், சுய இன்பத்தில் அறிந்த நிலையிலும் இந்திரியம் வெளியாகிறது. இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
இது நாம் உமிழ் நீரை உமிழ்வதைப் போன்றதே உமிழ் நீர் எப்படி உடனே சுரந்து விடுகிறதோ அது போல்தான் இந்திரியம் வெளியேற்றப் பட்ட சில மணி நேரத்திலேயே சுரந்து விடும். இதனால் எந்த சிக்களும் உடலுக்கு ஏற்படாது.
நமது பதில்:
சுய இன்பத்தின் மூலம் வெளியாகும் இந்திpரியமும்,தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதுதான் அதனால் அதனை தடுக்கத் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.
உண்மையில் வெளியாகும் அளவில் வேண்டுமானால் இரண்டும் சமமாக இருக்களாம். ஆனால் முறைமையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
தூக்கத்தில் இந்திரியம் வெளியாவது என்பது இயற்க்கை.சுய இன்பத்தின் மூலம் வெளியாவது என்பது இயற்கைக்கு மாற்றமான செயற்கை.
உடலில் ஏற்படும் எந்த மாற்றமும் இயற்கையில் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. (இயற்கை அளவுக்கு அதிகமானாலும் பிரச்சினையாகும். அப்படியிருக்க செயற்கை முறையில் மாற்றம் ஏற்படுவது உடலுக்கு கேடானது என்பதில் எந்த மருத்துவருக்கும் மாற்றுக் கருத்தில்லை) மாறாக செயற்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால் அது பிரச்சினைதான்.
உதாரணத்திற்கு ஒருவர் மெலிந்தவராக இருந்து, இயற்கையாக (அளவாகக்) கொளுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் செயற்கை முறைகளை பயன் படுத்தி ஒருவர் தனது பருமனை அதிகரித்துக் கொண்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட சிக்களை ஏற்படுத்தி விடும்.
அது போல்தான் தூக்கத்தில் ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அதன் மூலம் உடலுக்கு நல்லது ஏற்படும்.
சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்தினால் உடலுக்கு கேடுதான் விளையும்.
இந்தக் கருத்தில் தான் பெரும்பாலான மருத்துவர்களும், விஞ்ஞான ஆய்வாளர்களும் இருக்கின்றார்கள்.
அத்துடன் உமிழ் நீர் சுரப்பதைப் போல் இந்திரியமும் சுரந்து விடும் என்பதால் இதை ஆதரிக்க முடியாது. ஏனெனில் இந்திரியம் சுரக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. வெளியேற்றும் முறை சிறந்ததா? சிக்களானதா? என்பதுதான் பிரச்சினை.
சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளியேற்றுவது உடலுக்கு கேடானது என்று உருதியான பின் இந்திரியம் மீண்டும் சுரந்தாலும்,சுரக்கா விட்டாலும் அதை சுய இன்பம் மூலம் வெளியாக்க கூடாது.
அவர்களின் வாதம்:
சுய இன்பத்தின் மூலம் உடலுக்கு எந்த கேடும் ஏற்படவில்லையே! பிறகு ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
நமது பதில்:
சுய இன்பத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுதான் மிக முக்கியமானது.
அவர்கள் சொல்லும் இந்த பதில்தான் அதிகமான இளைஞர்களை இந்த கெட்ட நடத்தையின் பக்கம் இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.
சுய இன்பத்தில் ஈடுபடுவதின் மூலம்,அதில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நாட்டம் படிப்படியாகவே குறைந்து விடுகிறது.ஏனெனில் சுய இன்பத்தின் மூலம் அதில் ஈடுபடக்கூடியவன் அவசரமாக இந்திரியத்தை வெளிப்படுத்தவே நினைப்பான் அப்படி அவசரமாக வெளிப்படுத்திப் பழகிவிடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது,அவசரமாக இந்திரியம் வெளியாகிவிடுவதால்.அவர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் ஆகிவிடுவதின் மூலம் அவர்களின் மனைவியர் வேறு வழிகளை நாடி வழிகெட்டுப் போவதற்கு அவர்களே காரணமாகவும் ஆகிவிடுகின்றனர்.
தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவோம் என்ற பயம் ஏற்பட்டால் சுய இன்பம் கண்டு கொள்ளலாமா? (சகோதரர் பி.ஜெ அவர்கள் இது தொடர்பாக தமது இணையத் தளத்தில் வெளியிட்ட பதிலையே இதற்கு பதிலாக வெளியிடுகின்றோம்.)
இமாம் அஹ்மத் பின் ஹம்பல்,இப்னு ஹஸ்ம் போன்ற மிகச் சிறந்த அறிஞர்கள் இவ்வாறு (சுய இன்பத்தில்) ஈடுபடுவது குற்றமில்லை என்று கூறியதை அடிப்படையாக வைத்து ஹராமை ஹலாலாக்கும் கொள்கையுடைய யூசுப் அல் கர்ளாவி போன்றவர்கள் இது ஹலால் என்று பத்வா கொடுப்பதால் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இதைச் சில இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.
இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகிறார்கள்.
ஆனால் திருக்குர்ஆனும், நபி வழியும் இவர்களின் கருத்துக்கு எதிராகவே அமைந்துள்ளன.
“(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.” (23:5,6,7)
ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம் தவிர மற்ற வழிகளை விட்டும் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும்,இ;வ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையை தீர்த்துக் கொள்வோர் பழிக்கப் பட்டவர்கள் என்றும், வரம்பு மீறியவர்கள் என்றும் இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. இப்போது அடிமைப் பெண்கள் இல்லாததால் மனைவியர் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபியவர்களின் காலத்திலும் இருந்தது.இதற்கு மாற்ற வழியை நபி(ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“உங்களில் எவர் தாம்பத்தியத்திற்கு சக்தி பெற்றிருக்கிறாறோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப் படுத்தும்.கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையை கட்டுப்படுத்தும்.” (புகாரி : 1905)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“நானும், அல்கமா, மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி)அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள். நாங்கள் (வசதி,வாய்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபியவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் முடித்துக்கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத)பார்வையை கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். அதற்கு சக்தி பெறாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு (ஆசையை) கட்டுப் படுத்தக் கூடியதாகும். என்று சொன்னார்கள்.” (புகாரி : 5066)
நபியவர்களின் ஆட்சியின் துவக்க காலத்தில் ஏற்பட்ட வறுமையைப் போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத, ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.
இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்க்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றும் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
சுய இன்பம் செய்வதற்கு அனுமதியிருந்தால் அதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம் இதுதான்.ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளை கட்டுப் படுத்துமாறு நபி(ஸல்)அவர்கள் வழிகாட்டி விட்டனர்.
நபியவர்கள் காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தை தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் பயிற்சியில்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் எளிதில் விபச்சாரத்தில் விழுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.
நபியவர்களின் காலத்தில் போர் செய்வதற்க்காக வெளியே செல்கின்ற நேரத்தில் மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள் எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபி(ஸல்)அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
இப்னு மஸ்¥த்(ரலி)அவர்கள் கூறியதாவது :
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள் இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.” (புகாரி : 5071)
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி)அவாகள் நாங்கள் இறைத் தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.” (புகாரி : 5075)
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை” (5:87)
குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை.
மார்க்கத்தில் இது தடை செய்யப் பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர்.இவ்வாறு வாதிடுவதும் தவறானதாகும்.
மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட வழிகள் இல்லா விட்டால் தான் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்படும்.
நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்க வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப் பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணங்கள் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.
மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.
ஒரு ஊரில் பன்றியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் தின்னும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.
“தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்,நிகரற்ற அன்புடையோன்.” (2:173)
வலியச் செல்லாத நிலையில் இருந்தால் தான் அது நிர்பந்தம், நாமாக வலியச் சென்று அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டால் அது நிர்பந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இது விபச்சாரத்தை தடுக்காது தூண்டவே செய்யும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து விட்டு மனைவியின் துணையில்லாமல் இருக்கிறோம் அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.
இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உருத்தலும் இன்றி பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இவை தவிர்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணையின்றி இருக்கும் போது அதிகம் தவிர்கப் பட வேண்டியதாகும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மை தீய செயலில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.
மேலும் நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் நோன்பு நோற்று கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.
தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதின் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம். வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதின் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடுடன் இருக்க சுய இன்பப் பழக்கம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றும்.
இதையும் மீறி உடம்பில் ரொம்ப முறுக்கேறிவிட்டால் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆவதின் மூலமாக அதற்கு அல்லாஹ் இயற்கை வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற செயலில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
அன்பின் சகோதரர்களே! இளைஞர்களே! இந்த கேடு கெட்ட செயல்பாடு ஒரு குறுகிய நோக்கம் கொண்டதே! இதில் ஈடுபடுவது எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும் என்பதில் அனுவளவும் சந்தேகமில்லை.
ஆக நம்முடைய சிறிது நேர இன்பத்திற்க்காக எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக!

நன்றி ரஸ்மின் MISC