அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Friday, February 25, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 8 தொகுதிகள் கேட்போம் : காதர் மொகிதீன்


நாகப்பட்டினம் : தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, வரும் சட்டசபை தேர்தலில் எட்டு தொகுதிகள் கேட்போம் என்று மாநில தலைவர் காதர் மொகிதீன் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் நாகூரில், மாநில தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலர் முகமது அபுபக்கர், பொருளாளர் செய்யது அகமது உட்பட 41 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற திட்டமிட்டு செயலாற்றுவது. தமிழகத்தில் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை மறுப்பதோடு, வற்புறுத்தி கேட்பவர்களுக்கு, "இஸ்லாம் மதம் மாறியவர்' என்று சான்றிதழ் வழங்கப்படுவதால், கல்வி கற்கவோ, அரசு நிதியுதவி, வேலை வாய்ப்பு பெறவோ முடியாத நிலையில் உள்ளனர். மதம் மாறிய முஸ்லிம்களுக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கான சான்று வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், காதர் மொகிதீன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணியில் இடம் பெற்றுள்ள எங்கள் கட்சிக்கு, மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எட்டு தொகுதிகள் கேட்போம். 21 மாவட்டங்களில், 41 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது. கடையநல்லூர், ராமநாதபுரம், முதுகுளத்தூர், பழநி, நாகை, ஆம்பூர், பெரம்பூர் உட்பட எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடிய 21 தொகுதிகள் பட்டியலை, முதல்வரிடம் அளித்துள்ளோம். இருப்பினும், எங்களுக்கு கூட்டணியில் தொகுதி என்பது முக்கியமில்லை. சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக, நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக நாங்கள் எதிர்பார்ப்பில்லாமல் பாடுபடுவோம். இவ்வாறு காதர் மொகிதீன் கூறினார்.

0 comments: