அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, November 27, 2011

Rddr786:எய்யலூரில் மனு நீதி நாள் முகாம் : முருகுமாறன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார் கோவில் அடுத்த எய்யலூரில் நடந்த மனு நீதி நாள் முகாமில் எம்.எல்.ஏ., முருகுமாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த எய்யலூரில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமை தாங்கினார். தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றிய தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., முருகுமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவி வழங்கினார். அதில் 4 குடும்ப அட்டைகள், 3 மனை பட்டா மாற்றம், 4 பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது. டாக்டர் சிவானந்தம் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கூட்டுறவு துறை சார் பதிவாளர் ராதாகிருஷ்ணன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டம் குறித்தும் பேசினார். போக்குவரத்துத் துறை, நில அளவை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று தங்கள் துறை ரீதியாக மக்களுக்கு விளக்கம் அளித்தனர். முகாமில் 250 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் எய்யலூர் கீழத்தெருவில் சிமெண்ட் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்குவதாக எம்.எல்.ஏ., முருகுமாறன் உறுதியளித்தார். வருவாய் ஆய்வாளர் ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் பலர் பங்கேற்றனர். மேலும் இப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டமும் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி நன்றி கூறினார். தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் முதல் முறையாக 12 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தர வினை எம்.எல்.ஏ., முரு குமாறன் வழங்கினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=356704

Rddr786பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் : இனி முன் அனுமதி தேவையில்லை

சென்னை : ""பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு, முன் அனுமதியின்றி நேரில் விண்ணப்பிக்கலாம்,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், கூடுதல் பக்கங்கள் சேர்ப்பு போன்ற பணிகள், ஒருவரின் பாஸ்போர்ட்டிலேயே செய்யப்பட்டு வந்தன. தற்போது, தனியார் பங்களிப்புடன் கூடிய புதிய பாஸ்போர்ட் வழங்கும் முறையில், இம்மாற்றங்களை செய்ய விரும்புவோர், புதிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இவ்விண்ணப்பங்களை சமர்பிக்க, நீண்ட காத்திருப்பிற்கு பின் தான், ஆன் - லைனில் அனுமதி கிடைத்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை, முன் அனுமதி பெறாமல், தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில் நேரில் சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை, http://www.passportindia.gov.in/என்ற இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பதாரர்கள், ஆன் - லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், விண்ணப்ப குறிப்பு எண்(ஏ.ஆர்.என்.,) மற்றும் தேவையான அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில், வேலை நாட்களில் காலை 10 முதல், 1 மணி வரை, இவ்வசதியை பெறலாம்.