அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, October 28, 2010

மாதம் 95 ரூபாயில் Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbpsகைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.


MODEM உள்ள போன்கள் விபரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்.
தேவையானவை

1) மோடம் உள்ள போன் (உதாரணமாக Nokia N72)

2) போனையும் கணிணியையும் இணைக்கும் USB கேபிள். (உதாரணமாக Ca-53) (USB கேபிள் உங்கள் போன் மாடலை சொல்லி நோக்கியா டீலர் அல்லது பஜார்களில் கேட்டால் கி்டைக்கும்)

3) நோக்கியா பிசி சூட் அல்லது போனையும் கணிணியையும் இணைக்கும் கேபிளுடன் கொடுக்கப்படும் Cd (Nokia PC Suite or Phone Connection Cd Setup)

NOKIA PC SUITE  தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

4) உங்கள் கைபேசியின் சேவை வழங்குநரிடம் (ஏர்டெல், டாடா டோகோமோ, ஏர்செல்) இருந்து GPRS இணைப்பு. (டாடா டோகோமோவில் தான் வேகம் நன்றாக உள்ளது.

5) 6 ஜிபி ரூ.95. அன்லிமிடெட் ரூ.98 என்று ஏர்செல் பயன்படுத்தினால் இணைய வேகம் டாடா டோகோமோவில் கிடைப்பதில் சராசரியாக ஆறில் ஒரு பங்கு தான் கிடைக்கும். ஏர்செல்லில் தினமும் 24 மணிநேரமும் பயன்படுத்தினாலும் 2 ஜிபி கூட தாண்டாது. இப்போது BSNL-ல் 3G வருவதால் 3G மற்றும் மோடம் உள்ள போனாக வாங்கினால் இணைய வேகம் நன்றாக இருக்கும்)

செய்யவேண்டியவை

1.கேபிளுடன் கொடுக்கப்படும் Cdயில் இருந்து உங்கள் கைபேசிக்கான சாப்ட்வேர் அல்லது நோக்கியா பிசி சூட்டை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும். பிறகு கைபேசியில் GPRS இணைப்பு பெற வேண்டும். (GPRS-க்கான செட்டிங்ஸ் கைபேசியில் default ஆக வைக்கவும். பின் போனிலேயே இணையத்திற்கு சென்று பார்க்க நோக்கியா போனாக இருந்தால் ”0” வை அழுத்தி கொண்டிருந்தால் இணையம் திறக்கும். அதில் ஏதாவது ஒரு இணைய பக்கத்தை திறந்து பார்க்க முடிந்தால் கைபேசி இணைய இணைப்பிற்கு தயாராக உள்ளது என்று அர்த்தம்.) பின் கைபேசியையும் கணிணியையும் USB கேபிளால் இணைக்க வேண்டும்.

2.தானாகவே கணிணி கைபேசியை இணைக்கும் வரை காத்திருக்கவும்.

3.Start -> Control Panel -> System -> Hardware -> Device Manager-ல் சென்று பார்த்தால் அதில் Modems இருக்கும். அதில் Double Click செய்தால் அதில் உங்கள் கைபேசியின் மாடல் (உதாரணமாக Nokia N72 USB Modem) இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று பொருள்.

4.பிறகு Start -> Control Panel -> Network Connections சென்று பைல் மெனுவில் New Connection... என்பதை சுட்டினால் wizard ஒன்று வரும். அதில் Next கொடுத்து அடுத்து வருவதில் Connect to the Internet என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் Set up my Connection Manually என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் Connect using a dial-up modem என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். Isp Name என்பதில் ஏதாவது பெயர் (உதாரணமாக Dial Up) டைப் செய்து Next-ஐ அழுத்தவும். Phone Number என்பதில் Tata Docomo, Aircel என்றால் *99# என டைப் செய்து Next-ஐ அழுத்தி அடுத்து வருவதிலும் Next-ஐ அழுத்தவும். அடுத்துவரும் பக்கத்தில் "Add a shortcut to this connection to my desktop" என்பதில் டிக் போட்டு Finish என்பதை க்ளிக் செய்யவும். அவ்வளவுதான்.

5.Computer Desktop-ல் நீங்கள் பெயர் கொடுத்த ஐகான் இருக்கும். அதனை டபுள்க்ளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Dial என்பதை க்ளிக் செய்தால் சற்று நேரத்தில் இணையம் திறந்து அதற்கு அடயாளமாக டாஸ்க் பாரில் சிறு ஜகான் தோன்றும். கைபேசியிலும் சிறு ஜகான் (உலக உருண்டை அல்லது இருகோடுகள் போல)இடது மேற்பகுதியில் இருக்கும். உடனே பிரௌசரில் உங்களுக்கு தேவையான வலைப்பக்கத்திற்கு செல்லலாம். Internet Connection-ஐ நிறுத்த டாஸ்க் பாரில் இருக்கும் ஐகானில் வலதுபக்கம் க்ளிக் செய்து அதில் Disconnect என்பதை அழுத்தலாம்.

மேற்கண்ட அனைத்தும் செய்தும் கைபேசியில் இணையம் வந்து, கணிணியில் வரவில்லை என்றால் கைபேசியையும், கணிணியையும் Restart செய்து முயற்சிக்கவும்

0 comments: