அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, March 27, 2011

Rddr786:என் அன்பான மகனே/மகளே...


பெற்றோர்களை நேசியுங்கள்,
அவர்களை கடைசி காலத்தில்
தனியே விட்டு விடாதீர்கள்.
ஏனெனில்,
''தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.''(நபிமொழி)
ஒரு தாய்/தந்தை தன்னுடைய மகன்/மகளுக்கு எழுதும் மிகவும் உருக்கமான கடிதம்...
என் அன்பான மகனே/மகளே...
நான் முதுமை ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பாய் என்று நம்புகிறேன்.
நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ, அல்லது எதையேனும் கீழேபோட்டு விட்டாலோ, நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன். நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன்.
முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும்போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.
என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல்! இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.
என்னை மன்னித்து விடு, எனக்கு வயது ஆகிக்கொன்டே இருகின்றது.
என்னுடைய முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது, நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன். எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்படி நீயும் செய்வாய் என்று நம்புகிறேன்.
நான் ஏதேனும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும்; நீ! நான் சொல்லுவதை கேட்பாய் என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்றும் நம்புகிறேன்.
உனக்கு ஞாபகம் இருகின்றதா, குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது...
என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும். என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது.
நான் ஏதேனும் புலம்பிக் கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.
உன்னால் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்புடன் பேசுவாயா? உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தாலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.
எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருபேன், அப்பொழுது நீ என்னை கனிவோடு கவனிப்பாய் என்று நம்புகிறேன். தெரியாமல் நான் படுக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.
என்னுடைய கடைசி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும், அக்கறையோடும் பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும், என்னுடைய நேரம் நெருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எனக்காக என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும் மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.
கவலைப் படாதே, இறைவனை நான் பார்க்கும் பொழுது அவனிடம் உன் மீது அருள் மழைப் பொழியச்சொல்கிறேன், ஏனென்றால் நீ உனது தாய் தந்தையை மிகவும் நேசித்தாய் என்று. நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..
என்றும் அன்புடன்,
அப்பா/அம்மா
நினைவு படுத்துகிறோம்
பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடைசி காலத்தில் தனியே விட்டு விடாதீர்கள்.
ஏனெனில்,
''தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.'' (நபிமொழி)
posted by: Abu Safiyah

Friday, March 25, 2011

Rddr786:28ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மாவட்டத்தில் 33,669 பேர் பங்கேற்பு

கடலூர் : வரும் 28ம் தேதி துவங்கும் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு வரும் 28ம் தேதி முதல் துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 63 மையங்களில் 9,829 மாணவர்களும், 10 ஆயிரத்து 838 மாணவிகளும் மொத்தம் 20 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 1,009 மாணவிகள் மாணவர்களைவிட கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.அதேப்போன்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் 5,654 மாணவர்களும், 5,058 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 2,290 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்

Thursday, March 24, 2011

Rddr786:2011-ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.nஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34,புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.  விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.b
2. ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் இரத்தஉறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.nவிண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ,அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.n3. பாஸ்போர்ட்டில் மட்டுமே (ஞயளளயீடிசவ) ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதிஅரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  தங்கள் வசம்பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்து மண்டல கடவுச்சீட்டுஅலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.n4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறுமட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக (ஞசடிஉநளளiபே கநந) பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலினை இணைத்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.b5. ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.  ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட வேண்டும்.m(புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது). இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள்.   இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.nவிண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தெரிவுசெய்யும்.mமாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.n6. மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாககுலுக்கலை நடத்தி தெரிவு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு  தமிழ் நாடு மாநில ஹஜ் குழுதெரிவிக்கும்.  குலுக்கல் மூலமாக பயணிகள் தெரிவு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.nகுலுக்கலில் தெரிவு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில்புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின்நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Rddr786:இ.யூ.முஸ்லிம் லீகிலிருந்து ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கம்!


ஃபாத்திமா முஸஃப்ஃபர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து, அதன் தமிழ்நாடு மாநில மகளிரணி அமைப்பாளரான ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வரும் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் அவர்கள், கடந்த சில தினங்களாக இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் இயக்க முடிவுகளுக்கு மாறான செய்திகள் வெளியிட்டும் வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் தகுதி உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் இன்று முதல் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.
இயக்கத் தோழர்கள் இயக்கம் சம்மந்தமாக அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 22, 2011

Rddr786:ம.ம.க. வேட்பாளர்கள் -BIO DATA & Photo


பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (வயது 51) Download Photos

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளராக பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.பி.ஏ. எம்.பில் படித்து வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 25 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றிய ஜவாஹிருல்லாஹ் வட்டியில்லா வங்கி குறித்த ஆய்விற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்த பேராசிரியர் மாணவர் பருவம் முதல் பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

1996 ஆம் ஆண்டு முதல் த.மு.மு.க வின் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

1996ம் ஆண்டு முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமனற தேர்தலில் கூட்டணிக் கட்சிகரக்காக பிரச்சாரம் செய்த பேராசிரியர் 2009ல் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டார்.

ஏராளமான நூல்கள் மற்றும் கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் 2007ல் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்திய சிறுபான்மை மக்கள் சார்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், மலேசியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார்.

தற்போது தனியார் கல்லூரியில் உயர் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.

எம்.தமிமுன் அன்சாரி (வயது 34) Download Photos


1995 முதல் தமுமுகவின் தீவிர தொண்டராக அறிமுகமானார். தமுமுக வின் மாணவரணியை உருவாக்கி அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார். சென்னை புதுக்கல்லூரியில் பயிலும் போது, 1997&ல் சென்னை புதுக்கல்லூரியின் மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வெற்றி பெற்றார்.

2001&ல் தமுமுகவின் மாநில செயலாளராக பணி உயர்வு பெற்று செயல்பட்டார். 2009ல் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சிறந்த மேடைப் பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், நிர்வாகி என பன்முகத்தன்மை கொண்ட இவர் 34 வயதே நிரம்பியவர்.

ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் இயக்கத்தின் சார்பில் பங்கேற்றுள்ளார். இயக்கப்பணியை கட்டமைப்பதில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தனது 14 வயதில் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டினார். 1990 முதல் பொதுவாழ்வில் ஈடுபடும் இவருக்கு 21 ஆண்டுகால சேவை அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.எ.சி.எஸ் இளங்கலை பட்டம் முடித்த இவர், தற்போது சென்னை பல்கலைக்கழக்கத்தில் எம்.ஏ.அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார்.

ஏ.அஸ்லம் பாஷா (வயது 42)
 Download Photos 


மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளராக ஏ.அஸ்லம் பாஷா நிறுத்தப்பட்டுள்ளார். ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும், 2007 ல் மாவட்ட செயலாளராகவும், 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ், உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்.

Monday, March 21, 2011

Rddr786:மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு


அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி
 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி,
 2)ஆம்பூர் 
3) இராமநாதபுரம் 
ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,
 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி,
 ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர்  போட்டியிடுவார்கள்.

-ம.ம.க தலைமையகம்

Sunday, March 20, 2011

Rddr786:இன்ஷா அல்லாஹ், வெல்வதற்கு வாய்ப்புள்ள முஸ்லிம்கள்!


திமுக கூட்டணியுடன் போட்டியிடும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1) துறைமுகம் (அல்தாப் ஹுசைன்)
2) வாணியம்பாடி (எச். அப்துல் பாஸித்)
3) நாகப்பட்டினம் (எம். முஹம்மது ஷேக் தாவூது)

அஇஅதிமுக கூட்டணியுடன் போட்டியிடும்
மனிதநேய மக்கள் கட்சி
4) ஆம்பூர்,
5) ராமநாதபுரம்,
6) சேப்பாக்கம் (சென்னை)
ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
முஸ்லிம்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகள் பின்வருமாறு:

எஸ்.டி.பி.இ. கட்சியின் சார்பாக போட்டியிடுபவர்கள்
7) கடையநல்லுர் (நெல்லை முபாரக்)
8) தொண்டமுத்தூர் (உமர்)
9) பூம்புகார் நாகை மாவட்டம் (முஹம்மது தாரிக்)
10) பாண்டிச்சேரியில் நிரவி (திருப்பட்டினம்-பத்ருதீன்)
தி.மு.க சார்பாக போட்டியிடுபவர்கள்
11) ஆயிரம் விளக்கு (சென்னை) (அசன் முஹம்மது ஜின்)
12) தஞ்சாவூர் (உபயதுல்லாஹ்)
13) மதுரை மத்தி (கவுஸ் பாஷா)
14) பாளையங்கோட்டை (மைதீன்கான் கான்)
அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிடுபவர்கள்
15) ஆவடி - அப்துர் ரஹீம்
16) ராணிப்பேட்டை - அ.முஹம்மது
17) திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை
இவர்கள் வெற்றிபெற்று, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும், முழு ஈடுபாட்டுடன் சேவையாற்ற, அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

Rddr786:லால்பேட்டையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு


Saturday, March 19, 2011

Rddr786:ஐ.ஐ.டி.யில் சேர நுழைவு தேர்வு:ஏப்ரல் 10


இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. நிறுவனங்களில் பி.டெக். சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 10ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்வு இந்தியா முழுவதும் 130 நகரங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 4 லட்சத்து 95 லட்சம் மாணவ மாணவிகள் இந்ததேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். சென்னை மண்டலத்தில் மட்டும் 65ஆயிரத்து 650 பேர் எழுதுகிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 3 ஆயிரம் பேர் குறைவாகும்.
தமிழ்நாட்டில் இந்த தேர்வு சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் நடக்கிறது.
தேர்வு முடிவு மே மாதம் 25 ந்தேதி வெளியிடப்பட உள்ளது. எந்தபடிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஜுன் 27 ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

Wednesday, March 16, 2011

Rddr229:2G யின் முதல் தற்கொலை


முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரும் கிரீன் கௌஸ் புரமொட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான சாதிக் பாட்சா இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ அதிகாரிகள் டிசம்பர் மாதம் 8 ம் தேதி சாதிக் பாட்சாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மேலும் இன்று மாலை டெல்லியில் உள்ள சி.பி. ஐ அலுவலகத்துக்கு  விசாரணைக்கு வர சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டு இருந்ததாகவும் அதற்காக மதியம் 2 மணிக்கு சாதிக் பாட்சா டெல்லி செல்ல இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

2004 ம் ஆண்டு தொடங்கப் பட்ட கிரீன் கௌஸ் நிறுவனத்தில் இணை  இயக்குனராக இருந்த ராசாவின் மனைவி 2008 ல் விலகிக் கொண்டார். ராசாவின் சகோதரர் கலிய பெருமாள் இந்நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார். 2004 ௦ ம் ஆண்டு ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப் பட்ட கிரீன் கௌஸ் நிறுவனத்துக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளதாம். ஐந்து ஆண்டுகளில் ரூ 600 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது எப்படி என்பது குறித்தும் சி.பி.ஐ விசாரணை செய்து வருவதாகத் தெரிகிறது.

மேலும் கடந்த 2007 ம்  ஆண்டு கிரீன் கௌஸ் புரமொட்டர்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலும் தனது கிளையைத் துவக்கியுள்ளது. சிங்கப்பூர் கிளைக்கு நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் குறித்தும் சி.பி.ஐ விசாரணை செய்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் வரும் மார்ச் 31 அன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட உள்ளதாக சி.பி.ஐ இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை செய்தது இருப்பது குறிப்பிடத் தக்கது. சாதிக் பாட்சா மரணம் தற்கொலை தான் எனபது குறித்து உறுதியான தகவல் தெரிய வில்லை. எனினும் சாதிக் பாட்சாவின் மனைவி பானு அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபல தொலைக் காட்சி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சாதிக் பாட்சா பலவீனமான மனிதர் அல்ல என்றும் இது கொலையா அல்லது தற்கொலையா என உறுதியான 
முடிவுக்கு வர முடிய வில்லை என்று தெரிவித்து

Rddr786:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உடன்பாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனும் கையெழுத்திட்டனர். நிருபர்களிடம் காதர் மொய்தீன் கூறியதாவது:முஸ்லிம் லீக் கட்சிக்கு, துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு ஏற்கனவே தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரசுடன் உடன்பாடு ஏற்படுவதற்காக, எங்களிடம் ஒரு தொகுதியை பெற்று, காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. நெருக்கடியான காலத்தில், கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஏற்படுவதற்கு உறுதுணையாக இருந்ததால், எங்களுக்கு மீண்டும் மூன்று தொகுதியை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்

Monday, March 14, 2011

Rddr786சிதம்பரம் தொகுதியை ஒதுக்க கோரிக்கை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்

பரங்கிப்பேட்டை : தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை கேட்டு பெற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அமானுல்லா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சுக்கூர், மாவட்ட ஆலோசகர் கப்பார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் அப்துல் கப்பார்கான் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீதுஜான் பேசினார். கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்று குறையாமல் போட்டியிட வேண்டும். வெற்றி வாய்ப்புள்ள சிதம்பரம் தொகுதியை கேட்டு பெற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Friday, March 11, 2011

Rddr786:ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு.

பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜப்பான் இன்றையதினம் மிகப்பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது 11 மார்ச் 2011 இன்று..டோக்கியோ துறைமுகத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தாலும் (ஏறக்குறைய 8.4 ரிக்டர் அளவு) 25 அடி உயரத்திற்கு ஏற்பட்ட சுனாமி பேரலைகளாலும் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
.


இதற்க்கு முன் டோக்கியோ நகரில் 1923 ம் ஆண்டு ஏற்ப்பட்ட பூகம்பம்தான் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது..அந்த பூகம்பத்தில் ஏறக்குறைய 140000. க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்க முயற்சிப்போம்
.இரண்டாம் உலகப் போரின் அழிவுகளில் இருந்து மீண்டதுபோல் ஜப்பான் மக்கள் இம்முறையும் மீண்டு வருவார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக.

Rddr786:அண்ணாமலை பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2010 டிசம்பரில் தேர்வு எழுதிய பி.ஜி., டிப்ளமோ வகுப்புகள், சான்றிதழ் வகுப்புகளுக்குக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை இன்டர்நெட் மூலமும், 94425-51111 என்ற எண்ணில் எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், 04144 237356, 04144 237357, 04144 237358, 04144 237359 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாய்ஸ்மெயில் நெட் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Rddr786:உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள


தமிழ் நாடு அரசு தேர்தல் துறை இணையத்தில்

வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் த‌ங்களது பெ‌ய‌ர் இட‌ம் பெ‌ற்று‌ள்ளதா

எ‌ன்பதை ஏராளமானோ‌ர் பா‌ர்வை‌‌யி‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

http://elections.tn.gov.in/eroll/

வா‌‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் கொடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள ‌விவர‌ங்க‌‌ளி‌ல்

வா‌க்காள‌ர்க‌ள் ‌திரு‌த்த‌‌ங்க‌ள் செ‌ய்ய ‌விரு‌ம்‌பினா‌ல்

அத‌ற்கு‌ரிய ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை பெ‌ற்று அ‌ந்த‌ந்த மைய‌த்‌திலேயே

வழ‌ங்கலா‌ம் எ‌ன்று அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ரெட்டியூர் பகுதி வாக்காளர் விபரம் அறிய

இங்க  பார்க்க 

Thursday, March 10, 2011

Rddr786:முஸ்லிம் லீக் உடைகிறது


பாத்திமா முசப்பர் தனி அமைப்பு தொடங்குகிறார்
  


                                 பாத்திமா முசப்பர் இப்தார் நிகழ்ச்சியில்


மானம் இழந்து முஸ்லிம் லீக் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டையும் திராவிட முன்னேற்ற கழகத்திடம் பறி கொடுத்து அவல நிலை அடைந்ததை தொடர்ந்து முஸ்லிம்லீகில் புரட்சி குரல்கள்
கேட்கத்தொடங்கி விட்டன.

இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் முஸ்லிம்லீகின்முன்னணி பிரமுகரும் காலம் சென்ற லீக் தலைவர் அப்துல் சமது அவர்களின் மகளுமான பாத்திமா முஸப்பர் தனது ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்லீகின் சமீபத்திய நடவடிக்கைகள் குறிப்பாக கடந்த சில நாட்களாக திமுக காங்கிரஸ் கூட்டணிதகராறில் முஸ்லிம் லீக் அப்பாவியாய் தண்ணீர் லாரியில் அடிபட்ட ஆட்டுக்குட்டி யாய் பரிதாப நிலை அடைந்தது அது
அங்குள்ள தன்மான சிந்தனையாளர்களுக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் வரவழைத்துள்ளது இதனை
தொடர்ந்து பாத்திமா முசப்பர் தனி
அமைப்பு
கண்டதாக பரப்பரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் மூத்த மார்க்க மேதைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன்

Rddr786:காட்டுமன்னார்கோவிலை கைப்பற்ற வி.சி.,- தே.மு.தி.க., பகீரத முயற்சி

காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் சீட் பெற தி.மு.க., கூட்டணியில் வி.சி.,யும், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வும் பகீரத முயற்சியில் இறங்கியுள்ளன.காட்டுமன்னார்கோவில் தொகுதியை பொறுத் தவரை தலித் பெரும்பான்மை உள்ள தனி தொகுதியாக விளங்கி வருகிறது. இத்தொகுதியில் இதுவரை நடந்த 11 சட்டசபை தேர்தல்களில் 6 முறை தி.மு.க.,வும், இரு முறை காங்., கட்சியும், அ.தி. மு.க., - வி.சி., தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க., கூட்டணி சார்பில் வி.சி., வேட்பாளராக களம் இறங்கிய ரவிக்குமார் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ., வாக இருந்த வள்ளல்பெருமானை பார்த்து பழகிய மக்கள் புதிய முகமாக தெரிந்த ரவிக்குமாரை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமாரால் அதிருப்தியடைந்த வி.சி., தொண்டர்கள், தொகுதி மக்கள், வள்ளல்பெருமானே தேவலாம் என்ற விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எப்போதாவது இவர் தொகுதிப் பக்கம் வந்தால் கட்சியினருக்குள் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இதனால் இந்த முறை வி.சி., கட்சியில் புதிய வேட்பாளர் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என வி.சி., கட்சியினரே தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமார் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவோடு மீண்டும் போட்டியிட முயற்சிக்கிறார். ஆனால் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட்டால் கண்டிப்பாக தோற்கடிப்போம் என வி.சி., தொண்டர்களே சவால் விடுகின்றனர்.தி.மு.க., கூட்டணி நிலைமை இப்படி இருக்க, அ.தி.மு.க.,வே தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.ஆனால் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க., ஒற்றைக்காலில் நிற்பதாக கூறப்படுகிறது.

Wednesday, March 09, 2011

Rddr786: சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு



அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)..................



நண்பர்களே சவுதி அரேபியாவில் 800 க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன தகுதியானவர் தொடர்பு கொள்ள வேண்டிய online  முகவரிக்கு  இங்கே செல்லவும்  .
இச்செய்தி நண்பர் B .நசிர் அவர்களால் உண்மைய்லியே தேவை உள்ளவர்கள் ஒருவருக்காவது பயன் பெற வேண்டும் நல்ல நோக்கத்தில் பகிரப்பட்டுள்ளது 
நண்பர்களே தாங்களும் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்தவும் 
நண்பர்களே தாங்களும் இதை போன்ற செய்திகளை 608304@gmail.com  முகவரிக்கு தெரிய படுத்தவும். இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்..




Tuesday, March 08, 2011

Rddr786:பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கல்

கடலூர் : பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு நாளை (9ம் தேதி) முதல் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது.கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் ராமச்சந்திரன் செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன் பொதுத் தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டு வரும் நாளை 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு காரைக்கால் கல்வி மாவட்டத்திற்கு கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி மாவட்டத்திற்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளி, திண்டிவனம் மாவட்டத்திற்கு வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் மாவட்டத்திற்கு எம்.ஆர்.ஐ. சி.ஆர்.சி., உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மாவட்டத்திற்கு இன்பேன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாவட்டத்திற்கு சி.கே (பாபா) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.மெட்ரிக் தனித் தேர்வர்களுக்கு புதுச்சேரி நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு, மெட்ரிக் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தையும், ஆங்கிலோ - இந்தியன் அனுமதி சீட்டுகள் கிடைக்காதவர்கள் சென்னை, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு ராமச்Œந்திரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Rddr786:தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்,,,

இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.
அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.
அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
m
இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.
m
திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
m
பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.
1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
m
1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.
m
1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.
m
“காயிதே மில்லத்” இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
m
குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
m
ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.
முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.
அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது.
உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து “குர்ஆன்” ஓதினார்கள்.
m
நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.
m
இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.
மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது.
m
உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
m
முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.
mm
பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.
m
பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
m
பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
m
ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.
m
தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
m
காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் “காயிதே மில்லத்” கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் “அல்லாஹ் _ அக்பர்” என்று குரல் எழுப்பினார்கள்.
இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-
m
“தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.
எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்.”இவ்வாறு கருணாநிதி கூறினார்.
m
கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.
இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.
டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.
m
நன்றி: மாலை மலர்,காலச் சுவடுகள் , http://lalpet.com/?p=1486

Rddr786 :வி.சி.,யில் சீட் வழங்க போஸ்டர் காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

 ரவிக்குமார்  MLA
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில் வி.சி., கட்சியில் சீட் கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் காங்., எம்.பி., யாக இருந்தவர் இளைபெருமாள். இவரது மகன் நந்தகோபால். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. மண்ணின் மைந்தரான நந்தகுமாருக்கு காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்க வேண்டும் என வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு கோரிக்கை வைத்து வீராணநல்லூர், கருணாகரநல்லூர், நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சியியே இந்தொகுதியில் போட்டியிடும் சூழ்நிலை உள்ளதால் மீண்டும் அதே வேட்பாளரான ரவிக்குமார் அறிவிக்கப்படலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பே போஸ்டர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Monday, March 07, 2011

Rddr786:கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள்


கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில்
திட்டக்குடி (தனி) தொகுதியில் 90,
விருத்தாசலம் தொகுதியில் 139,
நெய்வேலி தொகுதியில் 109,
பண்ருட்டி தொகுதியில் 160,
கடலூர் தொகுதியில் 73,
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 167,
புவனகிரி தொகுதியில் 188,
சிதம்பரம் தொகுதியில் 101,
காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் 144
ஆக மொத்தம் 1,165 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் விவரம், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் பயன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம், வாக்குச் சாவடி அடங்கிய பகுதியின் வரைபடம், வாக்குச் சாவடியின் நிலை அறிய அவற்றின் அருகில் அரசியல் தொடர்பில்லாத நபர்களின் விவரம், வாக்குச் சாவடி காப்பாளர்கள் விவரம், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுலர்களின் முழு முகவரி அவர்களின் தொலைபேசி எண்கள் போன்றவை மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தில் இடம்பெற்று இருக்கும்.

Sunday, March 06, 2011

Rddr786:மலேசியாவில் வேலைக்கு வரவேற்பு - எச்சரிக்கை

கோலாலம்பூர்:"மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற, 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது' என, மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், முறையாக விசாரிக்காமல் வெளிநாடு சென்றால், சாலையோர ஓட்டல்களில் தான் பணியாற்ற வேண்டி வரும் என, இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மலேசியாவைப் பொறுத்த வரை கட்டுமானத் தொழில், ஓட்டல்கள், பெரிய தோட்டங்களில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில ஏஜன்டுகள், வெளிநாட்டு ஆசை காட்டி பலரையும் மலேசியாவிற்கு அழைத்து செல்கின்றனர். கவர்ச்சியான சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த சூழலில், 45 ஆயிரம் இந்தியர்களை புதியதாக நியமிக்க மலேசிய அரசு முன்வந்துள்ளது.இருப்பினும்,போலிகளிடம் யாரும் ஏமாற வேண்டாம் என, இந்திய ஐ கமிஷன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து கமிஷன் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:மலேசியாவில் பணி வாய்ப்பை தரும் நிறுவனத்தின் பின்னணி, வேலை வாங்கித் தரும் ஏஜன்ட் ஆகியோரைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு பின், பணியில் சேர வேண்டும். மலேசியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் வரை சம்பள பாக்கி வைத்துள்ளன. அத்துடன், இந்தியர்களை இழிவாகவும் நடத்தி வருகின்றன.இவ்வாறு பிரச்னையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில், நல்ல ஓட்டல்களில் பணியாற்றிய சிலரிடம், மலேசியாவில் மாதம் 35 ஆயிரம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி, அவர்களை அழைத்து வந்த ஏஜன்டுகள், மலேசியாவில் ஒட்டல் வேலைக்கு சேர்த்தனர். ஆனால், நாளடைவில், அது பிளாட்பாரத்தில் உள்ள ஓட்டல் என்பது தெரிந்தது.இவ்வாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Saturday, March 05, 2011

Rddr786:இரெட்டியூர் ஜாமிஆ மஸ்ஜிதின் முத்தவல்லி தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும்.....


இரெட்டியூர் ஜாமிஆ  மஸ்ஜிதின் முத்தவல்லி தேர்வு செய்வதர்க்காக ஜமாஅத்தார்கள் கூட்டம் 5 .03 .2011. சனிக்கிழமை இன்று ஜாமிஆ  மஸ்ஜிதின் வளாகத்திள்   நடைப்பெற்றது. இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள்  பெயர்கள் வருமாறு 

தலைவர் : ஜனாப் M. ஹாஜா நஜ்முதீன்  

பொருளாளர்: ஜனாப் M. நாசர்

செயலாளர் : ஜனாப் S. ஹபிப் ரஹ்மான்

இவர்கள் ஏகமனதாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள்  5 .03 .2011. முதல் 6 .03 .2012. வரை   பணிச்செய்வார்கள்
செய்தி: M .H .ஜாவீத்

 

Friday, March 04, 2011

Rddr786:இனி நாம் என்ன செய்யவேண்டும்


இதன் மூலம் நான் பெற்ற செய்தி, நீ எழுது, மற்றதை நாங்கள் பார்த்து கொள்கின்றோம், என்று என் சகோதரர்கள் உற்சாகம் தரும் அதேவேளை, நான் அறிந்த மற்றொரு செய்தி, இந்த சமுதாய இயக்கங்கள் இன்னும் நம்மை கூறுபோட முயலுவதால், விரக்தியின் விழிம்பில் நம் சமுதாயம் இருப்பதையும் எண்ணி வேதனைதான் மிஞ்சியது. ஏனெனில் பல தரப்பட்ட இயக்கங்களிலும், ஜமாத்களிலும், இன்ன பிற கொள்கையில் இருந்தும் பாடுபட்டு, பின் அதில் இருந்து வெறுத்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்!. இயக்கங்களை நாம் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள வேண்டும். அதையே நாம் உணவாக உட்கொண்டால் இதுபோன்ற அஜீரனக்கோளாருகள் வருவது தவிர்க்க முடியாதது!.
தற்போது தொகுதி ஒதுக்கீட்டு பங்கீடுகள் நடந்தேறி வருகின்றது. அதில் முதற்கட்டமாக ம.ம.க விற்கு அ.தி.மு.க கூட்டணியில் மூன்று தொகுதிகள் (அடேங்கப்பா! எம்மாம் பெரிய மனசு ஜெயலலிதாவிற்கு!.) வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மூன்று தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு விட்டு, இனி என் இஸ்லாமிய சகோதரர்கள், மீதமுள்ள 231 தொகுதியில் உள்ள மற்ற முஸ்லிம்களின் ஓட்டைபெற்று, இந்த கூட்டணிக்கு தாரைவார்த்து கொடுக்கவேண்டும்!. மற்றவர்களுக்காக நாயாய், பேயாய் இரவு பகல் பாராமல் அலைய வேண்டும்!. பிரச்சாரத்தின் போது அடி உதைகள் வாங்கவேண்டும். வழக்குகளை சந்திக்க வேண்டும். ஏன் சில சமயங்களில் தங்களின் இன்னுயிரையே மாய்க்கவேண்டும்!. இவைகள் அத்தனையும் எதற்கு தெரியுமா?. மூன்றே மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் எப்படிபட்டாவது அதிகரிக்க வேண்டி!.
ஆனால் அதையும் கூட, தனது பார்ப்பன புத்தியின் வெளிப்பாடாக, பி.ஜே.பி யை இவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தி அவர்களுக்கு மறைமுக ஆதரவை அதிமுக தெரிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!. (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா…!) ஏனெனில் ஜெயலலிதாவின் பார்ப்பன புத்தி அப்படித்தான் செயல்படும். அதைவிட மிக கொடுமை ம.ம.க.வை பழிதீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க இருக்கும் பலனை கிடைக்கவிடாமல் செய்ய நினைப்பது, த.த.ஜ தமிழக முஸ்லிம்களுக்கு செய்யும் பெரிய துரோக முடிவாகும். ம.ம.க வை எதிர்த்து இவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல!. இதை இவர்கள் உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும்.
ம.ம.க மட்டுமல்ல, இவர்கள் எந்த அரசியல் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுக்கின்றார்களோ, அக்கூட்டணிக்கு எதிர்தரப்பில் நிறுத்தப்படும் எந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது!. இவர்களுக்குப்பின் ஒரு கூட்டம் இருப்பது உண்மை என்றாலும், இவர்கள் எடுத்த இந்த தவறான முடிவை இம்மக்கள் நிராகரிக்கவேண்டும். வேறு முடிவுகளை நீங்கள் ஆதரித்தாலும் இதுபோன்ற தவறான முடிவிற்கு ஆதரவளிக்காமல் இருப்பதே நலம்.
மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதிகள் அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) . ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம்.
இதில் ஜெயித்து வருவது எத்தனைபேர்?. இதில் 50% வெற்றி வாய்ப்பென்றால், முஸ்லிம் இயக்கங்களின் சார்பில், இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் என்ற அவல நிலை ஏற்படும்!. இது இந்த சமுதாயத்திற்கு போதுமா? என்பதே தற்போதைய கேள்வி?
அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுக, மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் தற்போது அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எனவே இவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்த தலா பத்து முஸ்லிம்களுக்கு தேர்தலில் நிற்க தொகுதிகளை ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். ப.ம.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தலா ஐந்து தொகுதிகளை அவர்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தலா இரண்டு தொகுதிகளை அவர்களின் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
ஏனெனில் இந்த கட்சிகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் எந்த விதமான அதிகாரமிக்க பதவிகளை பெறுவதே கிடையாது!. குறிப்பாக ப.ம.க, மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட்கள் சார்பில் இதுவரை ஓரு முஸ்லிம்கூட சட்டமன்ற உறுப்பினரானது கிடையாது!. ஆனால் நம் ஓட்டுக்கள் மட்டும்தான் தேவை!.
திமுக 10
அதிமுக 10
காங்கிரஸ் 7
ப.ம.க 5
தே.மு.தி.க 5
ம.தி.மு.க 2
இரு கம்யூனிஸ்ட்கள் 4
விடுதலை சிறுத்தைகள் 2
இவ்வாறு இவர்கள் ஒதுக்கீடு செய்தால், ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் சார்பில் 45 முஸ்லிம் வேட்பாளர்களும், இஸ்லாமிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் 6 வேட்பாளர்களையும் சேர்த்து, இத்தேர்தலில் 51 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். இறக்கப்பட்ட வேண்டும்!. இந்த 51 வேட்பாளர்களில் மிகவும் கீழ்த்தரமாக வெறும் 50 % முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றார்களே யானால் வரும் சட்டமன்றத்தில் நீங்கள் 25 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை காணமுடியும்.
அதாவது இது நியாயமான மற்றும் அடிமட்ட கோரிக்கையின் கணக்கீடேயாகும். இதை தவிர முஸ்லிம்களின் எண்ணிக்கையை சட்டமன்றத்தில் நாம் அதிகரிக்கச் செய்யவே முடியாது. ஊராட்சி, பஞ்சாயத்து போர்டு, நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய அத்தனை தேர்தலிலும் இதே போன்று கிடைக்க செய்யவேண்டும்.
இந்த சமுதாயத்திற்கு இதுபோன்ற இடங்களில் சீட் கிடைக்கின்றதோ இல்லையோ!, தவறாமல் கடவுசீட்டை (பாஸ்போர்ட்) மட்டும் எளிமையாக கிடைக்க வழிவகை செய்து வைத்து விடுகின்றார்கள். ஏனெனில் இதை உங்களுக்கு எளிமை படுத்தி வைத்ததற்கு காரணமே, இதை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுங்கள் என்பதற்காகவே!. நீங்கள் இதுபோல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு இந்த அரசியல் கட்சிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காவே!. அட சனியன் பிடித்த அயோக்கியர்களே!. முதலில் கடவுச்சீட்டை எங்களுக்கு கிடைப்பதை கஷ்டமாக்குங்கள்!. அப்போதுதான் என் சமுதாயம் ஊரிலே இருந்து, இது போன்று தேர்தலை சந்திக்க சிந்திக்கும். ஆட்சி அதிகாரத்தினை அடைய முற்படும்!. அதிகார படிப்பினை படிக்கும்!.
எனவே இனி நாம் என்ன செய்யவேண்டும்?.
அரசியல் கட்சிகளின் சார்பில் அவர்கள் கட்சியை சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த தேர்தலில் அதிக சீட் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுவாக்கப்பட வேண்டும்!. இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் உள்ள ஜமாத்திலும், தேர்தலில் ஆதரவு என்ற நிலைபாட்டை மட்டுமே எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை கோரிக்கையாக, இந்த செவிட்டு அரசியல் கட்சிகளின் தலைமைக்கு புரியும் வண்ணம் போஸ்டர்களாகவும், நோட்டீசாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நம் கோரிக்கையை பிரபலப்படுத்தி வலுசேர்க்க வேண்டும். இந்த தேர்தலிலேயே கிடைக்க பெரும்முயற்சி செய்யவேண்டும்.
வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் ஊரில் உள்ளவர்கள் மூலம் போஸ்டர்கள் அடித்து ஓட்ட ஆவன செய்யுங்கள். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களின் நிலைபாட்டை மாற்ற நீங்களும் காரணமாக இருங்கள். இது தொடக்கமாக இருக்கட்டும்!. அடுத்த அடுத்த தேர்தல்களில் இவர்களுக்கு வேறு வழியில்லாமல் போகும்!. தந்தே தீருவார்கள்!. “இத்தனை முஸ்லிம்களை நிறுத்தினால் மட்டுமே ஓட்டு” என்ற கோரிக்கையை, இக்கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை பரிசீலிக்கும் முன்பே, வலுசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதையும் நினைவில் வையுங்கள்.
thanks: mohamed http://lalpetexpress.com/?p=760

Thursday, March 03, 2011

Rddr786:யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்




துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு

அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக

இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது
 விசா எண்,முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் 
தேதி, முகவரி, செல்பேசி
எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர்
மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய 
முகவரிக்கு அனுப்பி

வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை 
பயன்படுத்தி

கொள்ளவும்.

http://uaeindians.org/registration.aspx