அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Monday, January 31, 2011

நிர்வாணமாக குளிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?

இன்றைய நாட்களில் பல சகோதரர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கிறார்கள்.அதாவது ஒருவர் தனிமையில் குளிக்கின்ற நேரங்களில் உடம்பில் துணியின்றி நிர்வானமாக குழிக்க முடியுமா?

இந்தச் கேள்வியை பொருத்தவரை இரண்டு விதமான கருத்துக்கள் அறிஞர்களால் முன்வைக்கப் படுகின்றது.

முதலாவது : தனிமையில் நிர்வாணமாக குளிக்களாம்.

இரண்டாவது : எந்தக் காரணம் கொண்டும் தனிமையில் கூட நிர்வாணமாக குளிக்கக் கூடாது.

இந்த இரண்டு கருத்துக்களில் இரண்டாவது கருத்துத் தான் சரியானதாகும்.

அதாவது முதல் கருத்தை சொல்லக் கூடியவர்கள் வைக்கும் அதாரத்தையும் அதற்குறிய பதிலையும் தெளிவாக நாம் தெரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்குறிய பதிலை அறிந்து கொள்ளலாம்

நிர்வாணமாக குழிக்க முடியும் என்று சொல்லக் கூடியவர்கள் நபி மூஸா அவர்கள் சம்பந்தப் பட்ட ஒரு சம்பவத்தை அதாரமாக முன்வைக்கிறார்கள்.

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا عَوْفٌ عَنْ الْحَسَنِ وَمُحَمَّدٍ وَخِلَاسٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مُوسَى كَانَ رَجُلًا حَيِيًّا سِتِّيرًا لَا يُرَى مِنْ جِلْدِهِ شَيْءٌ اسْتِحْيَاءً مِنْهُ فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَقَالُوا مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ إِلَّا مِنْ عَيْبٍ بِجِلْدِهِ إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ وَإِمَّا آفَةٌ وَإِنَّ اللَّهَ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا لِمُوسَى فَخَلَا يَوْمًا وَحْدَهُ فَوَضَعَ ثِيَابَهُ عَلَى الْحَجَرِ ثُمَّ اغْتَسَلَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا وَإِنَّ الْحَجَرَ عَدَا بِثَوْبِهِ فَأَخَذَ مُوسَى عَصَاهُ وَطَلَبَ الْحَجَرَ فَجَعَلَ يَقُولُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ حَتَّى انْتَهَى إِلَى مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ مَا خَلَقَ اللَّهُ وَأَبْرَأَهُ مِمَّا يَقُولُونَ وَقَامَ الْحَجَرُ فَأَخَذَ ثَوْبَهُ فَلَبِسَهُ وَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ فَوَاللَّهِ إِنَّ بِالْحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ ضَرْبِهِ ثَلَاثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا فَذَلِكَ قَوْلُهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا(بخاري :3404

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவு கூட வெüயே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது பனூஇஸ்ராயீல்கüல் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ''இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்க வேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்'' என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகüலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்து விட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள் தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். ''கல்லே என் துணி! கல்லே என் துணி!'' என்று (அதை விரட்டிச் சென்றபடி) குரல் எழுப்பலானார்கள்.
 
இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூஇஸ்ராயீல் சமுதாயத்தினர் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகüலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்று விட்டது. உடனே மூசா (அலை) அவர்கள் தமது துணியை எடுத்துக் கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான் ''இறை நம்பிக்கை கொண்டவர்களே! மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிருபித்து விட்டான். மேலும் அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்'' என்னும் (33:69) இறைவசனம் குறிக்கின்றது 


(நூல்  புகாரி 3404)

இந்தச் செய்தியை முன்வைத்து சிலர் மூஸா நபியவர்கள் நிர்வாணமாக குளித்துள்ளதால் நாமும் குழிக்கலாம் என வாதிடுகிறார்கள்.

ஆனால் இந்த வாதம் தவறானதாகும்.

முதலில் இவர்களுக்கு இந்தச் செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை ஏன் என்றால் மூஸா நபியவர்கள் உடலில் குறைபாடுள்ளவர்கள் என்று மக்கள் நம்பி மூஸா நபியவர்களுக்கு துன்பம் கொடுத்ததினால் தான் இறைவனே மூஸா நபியவர்கள் விஷயத்தில் இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறான்.

அத்துடன் மூஸா நபியவர்கள் தனது ஆடையை எடுப்பதற்காக கல்லே என் துணி கல்லே என் துணி என்று சத்தம் போட்டுக் கொண்டு சென்றதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

மூஸா நபியவர்க விரும்பி தானாக இப்படி குழிக்கவில்லை இறைவன் அந்த சமுதாயத்திற்கு உண்மையை உணர்த்துவதற்காக செய்த ஏற்பாடுதான் இது ஆக இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக கொண்டு நிர்வாணமாக குழிக்க முடியும் என்ற சட்டத்தை முன்வைக்க எந்த முகாந்திரமும் இல்லை.

இரண்டாவது இந்தச் சட்டத்தை நபியவர்கள் மாற்றி விட்டார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى نَحْوَهُ عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ إِنْ اسْتَطَعْتَ أَنْ لَا يَرَيَنَّهَا أَحَدٌ فَلَا يَرَيَنَّهَا قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنْ النَّاسِ(أبو داود: 3501

உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல் : அபூதாவுத் (3501)


மேற்கண்ட செய்தியில் தனிமையில் இருக்கும் போது (அந்தரங்க இடங்கள் தெரிகின்ற வகையில்) நிர்வாணமாக இருப்பது பற்றி கேட்கப் படுகிறது.

அதற்கு பதில் சொன்ன நபியவர்கள் மனிதர்களை விட அல்லாஹ்விடமே வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதி வாய்ந்தவான் என்று சொல்கிறார்கள்.

மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.அதனால் தான் வெட்கப் படுவதற்கு மிக தகுதி வாய்ந்தவன் அல்லாஹ் தான் என்பதை நபியவர்கள் நமக்கு தெளிவாக உணர்த்துகிறார்கள்.

ஆக ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாக குளிப்பது மார்க்கத்தின் அடிப்படையில் தவரான செயலாகும் நாம் குழிக்கின்ற நேரங்களில் கண்டிப்பாக தனிமையில் குளித்தாலும் அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதை மேற்கண்ட அபூதாவுதின் அறிவிப்பில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும்.
அல்லாஹ்வே அறிந்தவன்.


Source:சத்தியம்…- Rasmin M.I.Sc -

Sunday, January 30, 2011

வேலை நிறுத்தம் செய்ததால் துபாயிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள்

துபாய் : ஊதிய உயர்வு கேட்டு துபாயின் மிக பிரபலமான கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான அரப்டெக்கில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


துபாயில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான அரப்டெக்கில் 200 திர்ஹம் (2500 இந்திய ரூபாய்) ஊதிய உயர்வு கேட்டு சுமார் 5,000 தெற்காசிய தொழிலாளர்கள் இரண்டு வாரமாய் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமான நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் நிறுனங்களின் முகாம்களில் தங்குவதோடு சுமார் மாதம் 700 முதல் 800 திர்ஹம் சம்பாதிக்கின்றனர். (8500 முதல் 10000 இந்திய ரூபாய்). வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கியதாக நம்பப்படும் 50 வங்காளதேசத்தை சார்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தம் அரிதாக நடக்கும் அமீரகத்தில் துனிஷியா புரட்சிக்கு பிறகு நடந்துள்ள இவ்வேலை நிறுத்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசியலீக் அறிவிப்பு

சென்னை :ஜன,29
  
 
.
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.
.
கிழக்கு தாம்பரம், கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலர் ஹைதர் அலி, ம.ம.க., பொதுச்செயலர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.
கூட்டத்தில், தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது; ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவது; வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகம் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.
கூட்டத்தின் நிறைவில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி:
.
விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் பலம் வாய்ந்துள்ள எங்கள் கட்சிக்கு கணிசமான அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். அதற்கான பணிகளில் தொண்டர்கள் நாளை (இன்று) முதலே ஈடுபடுவார்கள்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

.

இந்திய தேசிய லீக் 







Thanks : http://lalpet.com/?p=1230

Tuesday, January 25, 2011

குடியரசு தின வாழ்த்துக்கள்!

1)இந்திய தேசியக் கொடி

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது.. அப்பொழுதிலிருந்து இப்போது பயன்படுதிகிற கொடி வரை சில கொடி படங்கள் ......

கல்கத்தா கொடி

பைக்கஜி காமா அம்மையார் ஏற்றிய கொடி, 1907

1917ல் சுயாட்சி போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட கொடி

1921ஆம் ஆண்டு தற்காலிகமாக ஏற்கப்பட்ட கொடி

1931ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தை கொண்ட காவிக் கொடி
1931ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட இந்தியக் கொடி 

இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி


இப்போது பயன்படுதிகிற இந்திய தேசியக் கொடி
 




2)மாறாத ஓர் உணர்வு!  :
முத்துச்சரம் சிப்பியிலிருந்து சிதறி விழும் எண்ண முத்துகளின் ஒன்று 
மாறாத ஓர் உணர்வு!   நன்றியுடன் ...இரெட்டியூர் Express ...ல் ..உங்களுக்காக........

ஊழலற்ற அரசின் ஆட்சி
எகிறாத விலைவாசி
சாமான்ய இந்தியனின்
நிறைவேறாக் கனவுகள்

நம்பிக்கையுடன் நகர்வது
பழகிப்போன ஒன்றாகி..

எப்போதும் போலவே
குடியரசு தினக் கொண்டாட்டங்களை
கொடியேற்றம் அணிவகுப்பு
தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை

எதிர்பார்த்து..
நாளைய தினம்!

எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
எத்தனை எத்தனை இருப்பினும்

நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத ஓர் உணர்வாய்..!

வாழ்க பாரதம்!

குடியரசு தின வாழ்த்துக்கள்!

அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்


ﭧ ﭨ ﭽوَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى       
‘நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்’
(அல்குர்ஆன் 33:33)

இந்த உத்திரவின் மூலம், ‘அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்’ என்று கூறியது.

இன்றைய கல்லூரி மாணவிகள், வயதுக்கு வந்த இள நங்கைகள், ஏன் குடும்பப் பெண்கள்கூட நாகரீக மோகத்தால் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இரவு பலலெனப் பாராது கடை வீதிகளுக்கும். சினிமாத் தியேட்டர்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைகளையும், அதனால் விளையும் விபரீதங்களையும் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம். எனவே தான்.

‘ஒரு பெண் பாதுகாகப்பட வேண்டியவள் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் சைத்தான் அவளைப் பின் தொடருகிறான்’ எனக்கூறி சமுதாயத்தின் கண்களான பெண்களை எச்சசரித்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.

Author Resource:- www.albaqavi.com

Article From :Navas Khan Ismail - Nidur Mayiladuthurai

Monday, January 24, 2011

ICC-CRICKET-WORLD-CUP-2011


<><><><>
MatchDateTeamsVenue
119 Feb,2011 08:30 AM GMTIndia vs BangladeshDhaka
220 Feb,2011 04:00 AM GMTNew Zealand vs KenyaChennai
320 Feb,2011 09:00 AM GMTSri Lanka vs CanadaHambantota
421 Feb,2011 09:00 AM GMTAustralia vs ZimbabweAhmedabad
522 Feb,2011 09:00 AM GMTEngland vs NetherlandsNagpur
623 Feb,2011 09:00 AM GMTPakistan vs KenyaHambantota
724 Feb,2011 09:00 AM GMTSouth Africa vs West IndiesNew Delhi
825 Feb,2011 04:00 AM GMTAustralia vs New ZealandNagpur
925 Feb,2011 08:30 AM GMTBangladesh vs IrelandDhaka
1026 Feb,2011 09:00 AM GMTSri Lanka vs PakistanColombo
1127 Feb,2011 09:00 AM GMTIndia vs EnglandKolkata
1228 Feb,2011 04:00 AM GMTWest Indies vs NetherlandsNew Delhi
1328 Feb,2011 09:00 AM GMTZimbabwe vs CanadaNagpur
1401 Mar,2011 09:00 AM GMTSri Lanka vs KenyaColombo
1502 Mar,2011 09:00 AM GMTEngland vs IrelandBangalore
1603 Mar,2011 04:00 AM GMTSouth Africa vs NetherlandsMohali
1703 Mar,2011 09:00 AM GMTPakistan vs CanadaColombo
1804 Mar,2011 04:00 AM GMTNew Zealand vs ZimbabweAhmedabad
1904 Mar,2011 08:30 AM GMTBangladesh vs West IndiesDhaka
2005 Mar,2011 09:00 AM GMTSri Lanka vs AustraliaColombo
2106 Mar,2011 04:00 AM GMTIndia vs IrelandBangalore
2206 Mar,2011 09:00 AM GMTEngland vs South AfricaChennai
2307 Mar,2011 09:00 AM GMTKenya vs CanadaNew Delhi
2408 Mar,2011 09:00 AM GMTPakistan vs New ZealandPallekelle
2509 Mar,2011 09:00 AM GMTIndia vs NetherlandsNew Delhi
2610 Mar,2011 09:00 AM GMTSri Lanka vs ZimbabwePallekelle
2711 Mar,2011 04:00 AM GMTWest Indies vs IrelandMohali
2811 Mar,2011 08:30 AM GMTBangladesh vs EnglandChittagong
2912 Mar,2011 09:00 AM GMTIndia vs South AfricaNagpur
3013 Mar,2011 04:00 AM GMTNew Zealand vs CanadaMumbai
3113 Mar,2011 09:00 AM GMTAustralia vs KenyaBangalore
3214 Mar,2011 03:30 AM GMTPakistan vs ZimbabwePallekelle
3314 Mar,2011 09:00 AM GMTBangladesh vs NetherlandsChittagong
3415 Mar,2011 09:00 AM GMTSouth Africa vs IrelandKolkata
3516 Mar,2011 09:00 AM GMTAustralia vs CanadaBangalore
3617 Mar,2011 09:00 AM GMTEngland vs West IndiesChennai
3718 Mar,2011 04:00 AM GMTSri Lanka vs New ZealandMumbai
3818 Mar,2011 09:00 AM GMTIreland vs NetherlandsKolkata
3919 Mar,2011 03:30 AM GMTAustralia vs PakistanColombo
4019 Mar,2011 09:00 AM GMTBangladesh vs South AfricaDhaka
4120 Mar,2011 04:00 AM GMTZimbabwe vs KenyaKolkata
4220 Mar,2011 09:00 AM GMTIndia vs West IndiesChennai
4323 Mar,2011 08:30 AM GMTFirst QuarterfinalDhaka
4424 Mar,2011 09:00 AM GMTSecond QuarterfinalColombo
4525 Mar,2011 08:30 AM GMTThird QuarterfinalDhaka
4626 Mar,2011 09:00 AM GMTFourth QuarterfinalAhmedabad
4729 Mar,2011 09:00 AM GMTFirst SemifinalColombo
4830 Mar,2011 09:00 AM GMTSecond SemifinalMohali
4902 Apr,2011 09:00 AM GMTFINALMumbai