அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Wednesday, August 31, 2011

இரெட்டியூர் வளைகுடா (U.A.E) வாழ் சகோதர்கள் ஈத் பெருநாள் நிகழ்வுகள் (video)

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் நபிகள் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் இன்று ''ஈதுல் ஃபித்ர்'' - நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் எமது உளமார்ந்த நல் வாழ்த்துகள்.

இன்று இறையருளால் 30.9.2011 காலை 6:20 AM மணியளவில் EID HA GROUND @ Dubai ல் நடைபெற்ற ரமலான் பெருநாள் தொழுகை நமதூர் வளைகுடா வாழ் சகதோர்கள் கலந்து கொண்டார்கள் . மாலையில் தமிழ் பசாரில் சந்தித்து சிறப்பித்த அனைவருக்கும் இணையத்தளம் சார்பாக நன்றி கலந்த சலாமை தெர்வித்துகொள்கிறோம் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).



சந்திப்பின் வீடியோ.............





சந்திப்பின் படங்கள்

Wednesday, August 17, 2011

Rddr786:ரெட்டியூர் முகமது பீவி மறைவு.



அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் S. பசிர் அஹமது, ஜனாப் .S. ஹபிப் ரஹ்மான் அவர்களின் தயார்  முகமது  பீவி இன்று 17.08.2011 காலை 10 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

Thursday, August 04, 2011

இஸ்லாமியர்​களுக்கு கூகுள் கொடுத்துள்​ள ரமலான் பரிசு

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது.

இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.



--
36:68 நாம் யாருக்கு வாழ் நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத் திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து நடையை இழந்து படுக்கையில் கிடக்கிறான். குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான். இது தான் இவ்வசனத்தில் (36:68) படைப் பில் இறங்கு முகம் என்று கூறப்படுகிறது.

- பயனுள்ள தகவல்கள்
Thanks: Yahoo Group : http: //groups.yahoo.com/group/K-Tic-group

Tuesday, August 02, 2011

இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றதின் வேண்டுகோள்

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் நபிகள் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நமதூரில் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு நமதூரை சேர்ந்த சகோதரர்களைக் கொண்டு நமதூரில் நற்பணி செய்து வருகிறன்றனர் அல் ஹம்துலில்லாஹ்.!

கடந்த ஆண்டு   ரமலான் போல பள்ளி சிறார்களுக்கு “குர்ஆன்” & '' பயான் " மனனம் போட்டி நடத்தி பரிசு வழங்குதல் மற்றும் பள்ளிவாசலுக்கு மின் அலங்கார விளக்கு அமைத்தல் போன்ற நற்ப்பணியினை இவ்வாண்டும் வெற்றிகரமாக நடத்துவதற்காக நமதூர்  அனைத்து வெளிநாடுவாழ் (அமீரகம் ,சவூதி,மலேசியா,சிங்காப்பூர்,கத்தார் ) பெரியோர்கள்  மற்றும்  சகோதரர்கள் அனைவர்களும் நன்கொடையும் வழங்கி நற்ப்பணி தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
நம் ஒருமித்த ஒத்துழைப்புக்கு வல்ல நாயன் நற்கூலி தந்தருள்வானாக ஆமீன்!


இங்ஙனம்

இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் 
ரெட்டியூர் 

 குறிப்பு: அனைவர்களும்  தொடர்புகொள்ள:
H.ஜாவித்- (00919629929397)
J.ஆசிக் -( 00919585072255)
 A. பாஜ்ருல்லாஹ் -( 00919600141953 )