அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, January 30, 2011

வேலை நிறுத்தம் செய்ததால் துபாயிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள்

துபாய் : ஊதிய உயர்வு கேட்டு துபாயின் மிக பிரபலமான கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான அரப்டெக்கில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


துபாயில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான அரப்டெக்கில் 200 திர்ஹம் (2500 இந்திய ரூபாய்) ஊதிய உயர்வு கேட்டு சுமார் 5,000 தெற்காசிய தொழிலாளர்கள் இரண்டு வாரமாய் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமான நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் நிறுனங்களின் முகாம்களில் தங்குவதோடு சுமார் மாதம் 700 முதல் 800 திர்ஹம் சம்பாதிக்கின்றனர். (8500 முதல் 10000 இந்திய ரூபாய்). வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கியதாக நம்பப்படும் 50 வங்காளதேசத்தை சார்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தம் அரிதாக நடக்கும் அமீரகத்தில் துனிஷியா புரட்சிக்கு பிறகு நடந்துள்ள இவ்வேலை நிறுத்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments: