அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, March 10, 2011

Rddr786:காட்டுமன்னார்கோவிலை கைப்பற்ற வி.சி.,- தே.மு.தி.க., பகீரத முயற்சி

காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் சீட் பெற தி.மு.க., கூட்டணியில் வி.சி.,யும், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வும் பகீரத முயற்சியில் இறங்கியுள்ளன.காட்டுமன்னார்கோவில் தொகுதியை பொறுத் தவரை தலித் பெரும்பான்மை உள்ள தனி தொகுதியாக விளங்கி வருகிறது. இத்தொகுதியில் இதுவரை நடந்த 11 சட்டசபை தேர்தல்களில் 6 முறை தி.மு.க.,வும், இரு முறை காங்., கட்சியும், அ.தி. மு.க., - வி.சி., தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க., கூட்டணி சார்பில் வி.சி., வேட்பாளராக களம் இறங்கிய ரவிக்குமார் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ., வாக இருந்த வள்ளல்பெருமானை பார்த்து பழகிய மக்கள் புதிய முகமாக தெரிந்த ரவிக்குமாரை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமாரால் அதிருப்தியடைந்த வி.சி., தொண்டர்கள், தொகுதி மக்கள், வள்ளல்பெருமானே தேவலாம் என்ற விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எப்போதாவது இவர் தொகுதிப் பக்கம் வந்தால் கட்சியினருக்குள் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இதனால் இந்த முறை வி.சி., கட்சியில் புதிய வேட்பாளர் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என வி.சி., கட்சியினரே தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமார் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவோடு மீண்டும் போட்டியிட முயற்சிக்கிறார். ஆனால் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட்டால் கண்டிப்பாக தோற்கடிப்போம் என வி.சி., தொண்டர்களே சவால் விடுகின்றனர்.தி.மு.க., கூட்டணி நிலைமை இப்படி இருக்க, அ.தி.மு.க.,வே தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.ஆனால் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க., ஒற்றைக்காலில் நிற்பதாக கூறப்படுகிறது.

0 comments: