அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, March 22, 2011

Rddr786:ம.ம.க. வேட்பாளர்கள் -BIO DATA & Photo


பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (வயது 51) Download Photos

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளராக பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.பி.ஏ. எம்.பில் படித்து வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 25 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றிய ஜவாஹிருல்லாஹ் வட்டியில்லா வங்கி குறித்த ஆய்விற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்த பேராசிரியர் மாணவர் பருவம் முதல் பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

1996 ஆம் ஆண்டு முதல் த.மு.மு.க வின் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

1996ம் ஆண்டு முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமனற தேர்தலில் கூட்டணிக் கட்சிகரக்காக பிரச்சாரம் செய்த பேராசிரியர் 2009ல் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டார்.

ஏராளமான நூல்கள் மற்றும் கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் 2007ல் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்திய சிறுபான்மை மக்கள் சார்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், மலேசியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார்.

தற்போது தனியார் கல்லூரியில் உயர் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.

எம்.தமிமுன் அன்சாரி (வயது 34) Download Photos


1995 முதல் தமுமுகவின் தீவிர தொண்டராக அறிமுகமானார். தமுமுக வின் மாணவரணியை உருவாக்கி அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார். சென்னை புதுக்கல்லூரியில் பயிலும் போது, 1997&ல் சென்னை புதுக்கல்லூரியின் மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வெற்றி பெற்றார்.

2001&ல் தமுமுகவின் மாநில செயலாளராக பணி உயர்வு பெற்று செயல்பட்டார். 2009ல் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சிறந்த மேடைப் பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், நிர்வாகி என பன்முகத்தன்மை கொண்ட இவர் 34 வயதே நிரம்பியவர்.

ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் இயக்கத்தின் சார்பில் பங்கேற்றுள்ளார். இயக்கப்பணியை கட்டமைப்பதில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தனது 14 வயதில் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டினார். 1990 முதல் பொதுவாழ்வில் ஈடுபடும் இவருக்கு 21 ஆண்டுகால சேவை அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.எ.சி.எஸ் இளங்கலை பட்டம் முடித்த இவர், தற்போது சென்னை பல்கலைக்கழக்கத்தில் எம்.ஏ.அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார்.

ஏ.அஸ்லம் பாஷா (வயது 42)
 Download Photos 


மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளராக ஏ.அஸ்லம் பாஷா நிறுத்தப்பட்டுள்ளார். ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும், 2007 ல் மாவட்ட செயலாளராகவும், 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ், உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்.

3 comments:

faisal haq said...

munafig kal oru bodhum vettri pera mudiyadhu

faisal haq said...

ivanunga photova download panni poojai ya panna porom thevaiya?

ungal nanben said...

namalum nanmai seiya mattom. nanmai sairanu solrangavalai sairangalanu parkanum ....athavittu sairavankala kutham sollakudathu.......