அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, November 27, 2011

Rddr786:எய்யலூரில் மனு நீதி நாள் முகாம் : முருகுமாறன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார் கோவில் அடுத்த எய்யலூரில் நடந்த மனு நீதி நாள் முகாமில் எம்.எல்.ஏ., முருகுமாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த எய்யலூரில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமை தாங்கினார். தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றிய தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., முருகுமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவி வழங்கினார். அதில் 4 குடும்ப அட்டைகள், 3 மனை பட்டா மாற்றம், 4 பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது. டாக்டர் சிவானந்தம் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கூட்டுறவு துறை சார் பதிவாளர் ராதாகிருஷ்ணன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டம் குறித்தும் பேசினார். போக்குவரத்துத் துறை, நில அளவை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று தங்கள் துறை ரீதியாக மக்களுக்கு விளக்கம் அளித்தனர். முகாமில் 250 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் எய்யலூர் கீழத்தெருவில் சிமெண்ட் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்குவதாக எம்.எல்.ஏ., முருகுமாறன் உறுதியளித்தார். வருவாய் ஆய்வாளர் ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் பலர் பங்கேற்றனர். மேலும் இப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டமும் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி நன்றி கூறினார். தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் முதல் முறையாக 12 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தர வினை எம்.எல்.ஏ., முரு குமாறன் வழங்கினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=356704

0 comments: