அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, February 27, 2011

RDDR786:முஸ்லிம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகள்

சென்னை, பிப். 26: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் இக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி உடன்பாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனும் சனிக்கிழமை கையெழுத்திட்டனர்.
முஸ்லிம் லீக் கட்சி 2006 பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, அரவாக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தது.
சனிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சில் தி.மு.க. சார்பில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் வ.மு. செய்யது அஹமது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், ஷபிகுர் ரஹ்மான், ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், கமுதி பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்ட மேலவையில் தங்கள் கட்சிக்கு இடம் ஒதுக்குமாறு இத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். உரிய நேரத்தில் உரிய கெüரவம் தரப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாக இக் கட்சி மாநில செயலாளர் காயல் மகபூப் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சியில் தனி சின்னம் : அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டோம். அந்தத் தேர்தலின் போது தங்களுக்கென தனியாக ஒரு சின்னத்தில் போட்டியிடப் போவதாக தி.மு.க. தலைவர்களிடம் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார் என்றும் மகபூப் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க அணியில் ஏற்கெனவே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி உடன்பாடு செய்து கொண்ட இரண்டாவது கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். தி.மு.க. கூட்டணியில் இதுவரை 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

3 comments:

JEEVAN TRAVELS said...

இந்த வலைப்பதிவு மென்மெலும் வளர வாழ்த்துக்கள்
இரெட்டியூர் பற்றி தினம் தினம் தகவள்களை
எதிர்பார்க்கிறொம்.
அன்புடன் ஆனந்த்

JEEVAN TRAVELS said...

Visit My Blog.
http://rajaananth25.blogspot.com/
http://kattumannargudi.blogspot.com/

Reddiyur said...

@அன்புடன் ஆனந்த் : ungal varukakkum karutthukum nadrikal palaaaaaaaaaaaaaa