அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, February 01, 2011

திமுகவுக்கு ஆதரவு இல்லை! தவ்ஹீத் ஜமாத் முடிவு

சேலம்: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு  5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க., ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது' என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக பி. ஜெயினுல்ஆபிதீன், பொது செயலர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய் மற்றும் ஏழு செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழு முடிந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் ஜெயினுல்ஆபிதீன் கூறுபோது தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது. இந்த பிரச்னைகளை களைய கண்காணிப்பு குழு அமைப்பதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
மேலும், இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். கடந்த எம்.பி. தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு நாங்களும் காரணம். அதனால், வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு தான் ஆதரவு தெரிவிப்போம்.
எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டோம். இவ்வாறு ஜெயினுல் ஆபிதீன் கூறினார்

0 comments: