அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Wednesday, April 20, 2011

Rddr786: ICICI வங்கியில் டிபாசிட் செய்த பணத்தில் ரூ.1.12 லட்சம் "ஸ்வாகா': போலீஸ் விசாரணை

காட்டுமன்னார்கோவில் : வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை ஏ.டி.எம்., மூலம் “ஸ்வாகா’ செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த மாதர் சூடாமணியைச் சேர்ந்தவர் கவுரி (50). இவர் கடந்த ஆண்டு அக்டோ பர் மாதம் லால்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புதிய கணக்கு துவக்கினார்.
இவரது மகன் ஆந்திராவில் வேலை செய்யும் போது இறந்து விட்டதால் அதற்கு இழப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகையை கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி வங்கியில் டிபாசிட் செய்தார். அவ்வப்போது தனக்கு கிடைத்த பணத்தையும் சேமித்ததால் அவரது கணக்கில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் இருப்பு இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வங்கியில் இருந்து 3 மாதத்திற்கான “ஸ்டேட்மென்ட்’ அனுப்பப்பட்டது. அதில் வெறும் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது கண்டு கவுரி அதிர்ச்சியடைந்தார். அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஏ.டி.எம்., மூலம் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி 20 ஆயிரமும், 24ம் தேதி 40 ஆயிரமும், பிப்ரவரி 2ம் தேதி 20 ஆயிரமும், 12ம் தேதி 20 ஆயிரமும், மார்ச் 15ம் தேதி 12 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
 வங்கிக்கு நேரில் சென்று கேட்டபோது முறையான பதில் இல்லாததால் வெறுப் படைந்தார். ஏ.டி.எம்., மையத்தில் கேமரா இருந்தும் பணம் எடுத்தவரை கண்டுபிடிக்க பாங்க் ஆர்வம் காட்டவில்லை என கவுரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே கவுரி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
thanks: தினமலர்

0 comments: