அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, October 07, 2010

டெண்டுல்கருக்கு சிறந்த வீரர் விருது

இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சச்சின் டெண்டூல்கர்
சச்சின் டெண்டூல்கர்
37 வயதான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் ஆவார். கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்த மிகச் சிறந்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர் என்று பலரும் கருதுகின்றனர்.
இந்தியாவின் வீரேந்திர ஷேவாக்கும், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவும், இங்கிலாந்தின் கிரேம் ஸ்வானும் இதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
சிறந்த டெஸ்ட் வீரராக வீரேந்திர ஷேவாக்கும், சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக எபி டி வில்வியர்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நேயர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர் விருதையும் சச்சின் டெண்டுல்கர் வென்றுள்ளார்.
தேர்வுக்குரிய கால கட்டத்தில் சச்சின் டெண்டூல்கர் 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1064 ரன்களை எடுத்துள்ளார். ஆறு சதங்களை அடித்துள்ளார். இக்காலகட்டத்தில் 17 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற அவர் 914 ரன்களை குவித்துள்ளார். குவாலியரில் அவர் அடித்த இரட்டை சதமும் இதில் அடங்கும்

0 comments: