அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Monday, June 27, 2011

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை; சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர், ஜூன் 24: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு சிறுபான்மை இன மாணவ, மாணவியர் (கிறிஸ்தவர், இஸ்லாமியர், பெüத்தர், சீக்கியர், பாரசீக மதத்தினர்) விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஆட்சியரின் செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11, 12-ம் வகுப்புகள், வாழ்க்கைத் தொழில் கல்வி, ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக், நர்சிங் டிப்ளமோ, ஆசிரியர் பட்டயப் பயிற்சி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு (எம்.பி.ஏ., எம்.சி.ஏ நீங்கலாக) பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர், இஸ்க்ப் உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட கல்வி நிலையங்கள், தகுதி உள்ள மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி உதவித் தொகை பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் 50 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குக் குறையாமல் இருக்கவேண்டும். வேறு கல்வி உதவித் தொகை பெற்று இருக்கக் கூடாது. குடும்பத்தில் இருவருக்கு மட்டும் உவித் தொகை வழங்கப்படும்.
11-ம், 12-ம் வகுப்பு மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 4-7-2011 க்குள்ளும், புதிய வின்ணப்பங்களை 11-7-2011 க்குள்ளும், பிற மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 30-6-2011 க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 15-7-2011 க்குள்ளும் தங்கள் கல்வி நிலையங்களில் அளிக்கவேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 comments: