அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Saturday, November 16, 2013

இரெட்டியூரில் பெருமழை,பெருங்காற்று புகைப்படங்கள்



தமிழ்நாட்டை நெருங்கி வரும் புயல் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்குபோது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். வட மாவட்டங்களில் கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது தீவிரம் அடைந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 8 மணி அளவில் சென்னையில் இருந்து 490 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. அந்த புயல் சின்னம் தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் இரெட்டியூரில் பெருமழை பெய்து வருகிறது.பெருமளவு காற்றும் வீசி வருகிறது.இதன் எதிரொலியாக மின்சார விநியோகமும் பெருமளவு பாதிக்கப் பட்டு இருக்கிறது.
இரெட்டியூரில் மழை: புகைப்பட பதிவுகள்…



0 comments: