அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Wednesday, March 02, 2011

rddr786:சிதம்பரம் சட்டமன்ற தொகுதி.. வலுக்கும் கோரிக்கை..!

தமிழகத்தின் மிக குறிப்பிடத்தக வகையில் கணிசமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ள தொகுதிகளில் கடலூர் மாவட்டம் சிதம்பரமும் இடம் பெற்றுள்ளது.
இது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமா அல்லது திமுக போட்டியிடுமா எனபதை அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அப்படி அக்கட்சிக்கு ஒதுக்கினால் முஸ்லிம் லீக்கில் மாநில செயலாளராக பொருப்பு வகிக்கும் தளபதி ஷஃபீகுர் ரஹ்மானின் வாரிசு அப்துல் ரகுமான் என்பவருக்கு அத்தொகுதியை பெற முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் கட்சியின் மாணவர் அணியில் பொருப்பு வகித்தவர் என்பதும், எங்கு சென்றாலும் கட்சிப்பணியை தனது முதல் பணியாக தொடங்குபவர் என்பதாலும் இவரை முன்னிறுத்த இருப்பதாக பேசிக்கொள்கின்றனர்.
கட்சியின் பொருப்பாளர்களும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களும் தளபதி ஷஃபீகுர் ரஹ்மானின் மகனுக்கு சீட் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காயிதெமில்லத் காலம் முதல் கட்சியின் நம்பிக்கைக்குரிய  நிர்வாகியாகவும்,தமிழக அளவில்  இருக்கும் அறிமுகமும் தளபதியின் சேவை மனப்பான்மையும் அவரின் வாரிசுக்கு மகுடம் சூட்டுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்தி :http://lalpet.com/?p=1457

0 comments: